திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 335

முதல் தந்திரம்24. கள்ளுண்ணாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப்போத அமுதைப் பொசித்தவர் எண்சித்திமோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்றாகும் மதத்தால் அறிவுஅழிந் தாரே.

உரை

இறைவனை அடைய வேண்டும் என்று சிவ சிந்தனையில் இருக்கும் சிவயோகிகள், பிராணாயாம முறையில் மூச்சுக்காற்றைத் தன் வசப்படுத்தி, அதனால் கிடைக்கும் குண்டலினி சக்தியின் மூலம் அமிர்தத்தைப் பருகி, எட்டுவித சித்திகளையும் பெற்றுப் பேரானந்தத்தில் இருப்பார்கள். அப்படி இல்லாமல், உலக இன்பங்களில் மோகம் கொண்டவர்கள் மதுவைக் குடித்து மூடர்களாகி, மதம் பிடித்த யானை போல் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் கோபம் கொண்டு, அறிவு அழிந்து ஒரு நாள் இறந்து போகின்றனர்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனை அடைய வேண்டும் என்று சிவ சிந்தனையில் இருக்கும் சிவயோகிகள், பிராணாயாம முறையில் மூச்சுக்காற்றைத் தன் வசப்படுத்துவார்கள்.

  • வரி 2

    அதனால் கிடைக்கும் குண்டலினி சக்தியின் மூலம் அமிர்தத்தைப் பருகி, எட்டுவித சித்திகளையும் பெற்றுப் பேரானந்தத்தில் இருப்பார்கள்.

  • வரி 3

    அப்படி இல்லாமல், உலக இன்பங்களில் மோகம் கொண்டவர்கள் மதுவைக் குடித்து மூடர்களாகின்றனர்.

  • வரி 4

    மதம் பிடித்த யானை போல் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் கோபம் கொண்டு, அறிவு அழிந்து ஒரு நாள் இறந்து போகின்றனர்.

திருமந்திரம் பாடல் #335

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout