திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 334

முதல் தந்திரம்24. கள்ளுண்ணாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

தத்துவம் நீக்கி மருள்நீக்கித் தானாகிப்பொய்த்தவம் நீக்கிமெய்ப் போகத்துட் போகியேமெய்த்த சகமுண்டு விட்டுப் பரானந்தச்சித்திய தாக்கும் சிவானந்தத் தேறலே.

உரை

பாடல் #331ல் உள்ளபடி சிவானந்தத் தேனை அருந்தினால், உயிர்கள் உடம்பில் வாழ இறைவனால் கொடுக்கப்பட்ட 96 தத்துவங்கள் நீங்கும். அவை அனைத்தும் தன்னுடையது என்று எண்ணும் மாயைகள் நீங்கும். உலக இன்பங்களைப் பெற எண்ணிப் பொய்யான தவங்கள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நீங்கும். இந்த உலகைப் பற்றிய நினைப்பு ஒழிந்து, தமக்குள் சிவபோகமாகிய என்றும் அழியாத உண்மை வீட்டில் பேரானந்த மயக்கத்துள் இருக்கலாம்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #331ல் உள்ளபடி சிவானந்தத் தேனை அருந்தினால், உயிர்கள் உடம்பில் வாழ இறைவனால் கொடுக்கப்பட்ட 96 தத்துவங்கள் நீங்கும்; அவை அனைத்தும் தன்னுடையது என்று எண்ணும் மாயைகளும் நீங்கும்.

  • வரி 2

    உலக இன்பங்களைப் பெற எண்ணிப் பொய்யான தவங்கள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நீங்கும்.

  • வரி 3

    இந்த உலகைப் பற்றிய நினைப்பு ஒழியும்.

  • வரி 4

    தமக்குள் சிவபோகமாகிய என்றும் அழியாத உண்மை வீட்டில் பேரானந்த மயக்கத்துள் இருக்கலாம்.

திருமந்திரம் பாடல் #334

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout