தொடர்ந்து படிக்கread this section continuously
உண்ணீர் அமுதம் உறுமூ றலைத்திறந்தெண்ணீர் குரவன் இணையடித் தாமரைநண்ணீர் சமாதியி னாடிநீ ரானலங்கண்ணா றொடேசென்று கால்வழி காணுமே.
உரைmeaning
குருவின் ஈடு இணையில்லாத தாமரை மலர் போன்ற திருவடிகளை எப்போதும் தியானத்தில் எண்ணி, குண்டலினியை எழுப்பி, மூச்சுக்காற்றின் மூலம் ஆறு ஆதார சக்கரங்களுக்கும் எடுத்துச் சென்று, ஏழாவது சக்கரமான சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் இறைவனோடு சேர்த்து, பேரின்பத்தைத் தரும் அமிர்தம் ஊறும் இடத்தைத் திறந்து, அதிலிருந்து கிடைக்கும் அமிர்தத்தைப் பருகி, சமாதி நிலையை அடைந்து பேரானந்த நிலையில் இருக்கலாம்.
Contemplating always in meditation the holy feet of the guru, which are like lotus flowers and have no equal, one raises the kundalini, carries it by way of the breath through all six of the foundation chakras, joins it with God who is seated in the seventh chakra, the Sahasradala, opens the place where the nectar that gives the great joy wells up, drinks the nectar obtained from it, reaches the state of samadhi, and may abide in the state of great bliss.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பேரின்பத்தைத் தரும் அமிர்தம் ஊறும் இடத்தைத் திறந்து, அதிலிருந்து கிடைக்கும் அமிர்தத்தைப் பருகலாம்.
One opens the place where the nectar that gives the great joy wells up, and may drink the nectar obtained from it.
- வரி 2Line 2
குருவின் ஈடு இணையில்லாத தாமரை மலர் போன்ற திருவடிகளை எப்போதும் தியானத்தில் எண்ண வேண்டும்.
One must contemplate always in meditation the holy feet of the guru, which are like lotus flowers and have no equal.
- வரி 3Line 3
குண்டலினியை எழுப்பி, மூச்சுக்காற்றின் மூலம் ஆறு ஆதார சக்கரங்களுக்கும் எடுத்துச் சென்று, சமாதி நிலையை அடைந்து பேரானந்த நிலையில் இருக்கலாம்.
Raising the kundalini and carrying it by way of the breath through all six of the foundation chakras, one reaches the state of samadhi and may abide in the state of great bliss.
- வரி 4Line 4
ஏழாவது சக்கரமான சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் இறைவனோடு சேர்த்து, அந்த வழியைக் காணலாம்.
Joining it with God who is seated in the seventh chakra, the Sahasradala, one may see that very path.
திருமந்திரம் பாடல் #336





