திருமூலர் அருளிய திருமந்திரம்
23. நடுவு நிலைமை

முதல் தந்திரம் பாடல் 320–323 (4 பாடல்கள்)

நடுவுநின் றார்க்கன்றி ஞானமும் இல்லைநடுவுநின் றார்க்கு நரகமும் இல்லைநடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர்நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே.

நடுவுநின் றான்நல்ல கார்முகில் வண்ணன்நடுவுநின் றான்நல்ல நான்மறை ஓதிநடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவோர்நடுவுநின் றார்நல்ல நம்பனும் ஆமே.

நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவார்நடுவுநின் றார்சிலர் தேவரு மாவார்நடுவுநின் றார்சிலர் நம்பனு மாவார்நடுவுநின் றாரொடு நானும்நின் றேனே.

தோன்றிய எல்லாம் துடைப்பன் அவனன்றிஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடிமூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தைநான்றுநின் றார்நடுவு ஆகிநின் றாரே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #320

1 / 4

0:000:00
23. நடுவு நிலைமைபாடல் 320

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com