திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 320

முதல் தந்திரம்23. நடுவு நிலைமை

தொடர்ந்து படிக்கread this section continuously

நடுவுநின் றார்க்கன்றி ஞானமும் இல்லைநடுவுநின் றார்க்கு நரகமும் இல்லைநடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர்நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே.

உரை

தனக்கோ, உற்றார் உறவினர்க்கோ, மற்ற உயிர்கள் வாழும் உலகத்திற்கோ என்ன நடந்தாலும், இன்பம் துன்பம் என எது வந்தாலும், எல்லாம் இறை செயல் என்று எதனாலும் பாதிக்காமல், விருப்பு வெறுப்பு இல்லாமல், தான் செல்லும் இறை வழியிலிருந்து சிறிதும் மாறாமல் நடுநிலையான மனநிலையில் இருப்பவர்களைத் தவிர, மற்றவர்களுக்கு உண்மையான ஞானம் கிடைப்பதில்லை. அப்படி இருப்பவர்களுக்கு நரகமும் இல்லை. அப்படி இருக்கக்கூடியவர்களே நல்ல தேவர்களாகவும் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் நின்ற நெறியிலேயே யானும் நிற்கின்றேன்.

வரி வாரியாக

  • வரி 1

    தனக்கோ, உற்றார் உறவினர்க்கோ, மற்ற உயிர்கள் வாழும் உலகத்திற்கோ என்ன நடந்தாலும், இன்பம் துன்பம் என எது வந்தாலும், எல்லாம் இறை செயல் என்று எதனாலும் பாதிக்காமல், விருப்பு வெறுப்பு இல்லாமல் நடுநிலையான மனநிலையில் இருப்பவர்களைத் தவிர, மற்றவர்களுக்கு உண்மையான ஞானம் கிடைப்பதில்லை.

  • வரி 2

    தான் செல்லும் இறை வழியிலிருந்து சிறிதும் மாறாமல் அப்படி இருப்பவர்களுக்கு நரகமும் இல்லை.

  • வரி 3

    அப்படி இருக்கக்கூடியவர்களே நல்ல தேவர்களாகவும் இருப்பார்கள்.

  • வரி 4

    அப்படிப்பட்டவர்கள் நின்ற நெறியிலேயே யானும் நிற்கின்றேன்.

திருமந்திரம் பாடல் #320

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout