தொடர்ந்து படிக்கread this section continuously
ஆதிப் பிரான் அமரர்க்கும் பரஞ்சுடர்சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்ஓதி உணரவல் லோமென்பர் உள்நின்றசோதி நடத்துந் தொடர்வுஅறி யாரே.
உரைmeaning
பிறப்பு இறப்பு இல்லாத தேவர்களுக்கும் இறைவனாக இருப்பவனும், அண்டங்கள் முழுவதும் பரவி ஜோதியாக ஆதியிலிருந்தே இருப்பவனும் ஆகிய இறைவனை உணர்ந்த அடியவர்கள், அவன் கூறிய வழியிலேயே தொடர்ந்து சென்று இறுதியில் அடைகின்ற பெருந்தெய்வமாக அவன் இருக்கின்றான். அத்தகைய இறைவனை உலகக் கல்வியைப் படித்தே உணர்ந்துவிட முடியும் என்று கூறுபவர்கள், தமக்குள் ஜோதி வடிவாக நின்றுகொண்டு தம்மை வழி நடத்துபவனும், உயிரை உடலோடு தொடர்ந்து வைத்திருப்பவனும் அவனே என்னும் உண்மையை அறியாதவர்கள் ஆவார்கள்.
He is God even to the devas who have no birth and no death, and he has stood from the very beginning as the light spread through all the universes; and to the devotees who have realised him he is the great deity they finally reach by going on continuously in the very path he declared. Those who say that such a God can be realised merely by studying worldly education are people who do not know the truth that it is he who stands within them in the form of light and leads them on their way, and he who keeps the life joined to the body.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பிறப்பு இறப்பு இல்லாத தேவர்களுக்கும் இறைவனாக இருப்பவனும், அண்டங்கள் முழுவதும் பரவி ஜோதியாக ஆதியிலிருந்தே இருப்பவனும் ஆகிய இறைவன்,
He is God even to the devas who have no birth and no death, and he has stood from the very beginning as the light spread through all the universes,
- வரி 2Line 2
அவனை உணர்ந்த அடியவர்கள் அவன் கூறிய வழியிலேயே தொடர்ந்து சென்று இறுதியில் அடைகின்ற பெருந்தெய்வமாக இருக்கின்றான்.
and to the devotees who have realised him he is the great deity they finally reach by going on continuously in the very path he declared.
- வரி 3Line 3
அத்தகைய இறைவனை உலகக் கல்வியைப் படித்தே உணர்ந்துவிட முடியும் என்று கூறுபவர்கள்,
Those who say that such a God can be realised merely by studying worldly education
- வரி 4Line 4
தமக்குள் ஜோதி வடிவாக நின்றுகொண்டு தம்மை வழி நடத்துபவனும், உயிரை உடலோடு தொடர்ந்து வைத்திருப்பவனும் அவனே என்னும் உண்மையை அறியாதவர்கள் ஆவார்கள்.
are people who do not know the truth that it is he who stands within them in the form of light and leads them on their way, and he who keeps the life joined to the body.
திருமந்திரம் பாடல் #319





