திருமூலர் அருளிய திருமந்திரம்
22. கல்லாமை

முதல் தந்திரம் பாடல் 310–319 (10 பாடல்கள்)

கல்லா தவரும் கருத்தறி காட்சியைவல்லா ரெனிலருட் கண்ணான் மதித்துளோர்கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோரும்கல்லாதவரும் இன்பம் காணுகி லாரே.

வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார்அல்லா தவர்கள் அறிவு பலவென்பார்எல்லா இடத்தும் உளன்எங்கள் தம்இறைகல்லா தவர்கள் கலப்புஅறி யாரே.

நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்துநில்லாக் குரம்பை நிலையென் றுணர்வீர்காள்எல்லா உயிர்க்கும் இறைவனே யாயினும்கல்லாதவர் நெஞ்சத்துக் காணஒண் ணாதே.

கில்லேன் வினைத்துயர் ஆக்கு மயலானேன்கல்லேன் அரன்நெறி அறியா தகையின்வல்லேன் வழங்கும் பொருளே மனத்தினுள்கல்லேன் கழியநின்று ஆடவல் லேனே.

நில்லாது சீவன் நிலையன்றுஎன் றெண்ணிவல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்கல்லா மனித்தர் கயவர் உலகினில்பொல்லாத வினைத்துயர் போகஞ்செய் வாரே.

விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனிகண்ணினின் உள்ளே கலந்தங் கிருந்ததுமண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின்றெண்ணிலி எழுதி இளைத்துவிட் டாரே.

கணக்கறிந் தார்க்கன்றிக் காணஒண் ணாதுகணக்கறிந் தார்க்கன்றிக் கைகூடாக் காட்சிகணக்கறிந் துண்மையைக் கண்டண்ட நிற்கும்கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே.

கல்லாத மூடரைக் காணவும் ஆகாதுகல்லாத மூடர்சொல் கேட்கக் கடனன்றுகல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்கல்லாத மூடர் கருத்துஅறி யாரே.

கற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள்சுற்றமும் வீடார் திரிசறார் மூடர்கள்மற்றும் பலதிசை காணார் மதியிலோர்கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே.

ஆதிப் பிரான் அமரர்க்கும் பரஞ்சுடர்சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்ஓதி உணரவல் லோமென்பர் உள்நின்றசோதி நடத்துந் தொடர்வுஅறி யாரே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #310

1 / 10

0:000:00
22. கல்லாமைபாடல் 310

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com