திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 315

தொடர்ந்து படிக்கread this section continuously

விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனிகண்ணினின் உள்ளே கலந்தங் கிருந்ததுமண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின்றெண்ணிலி எழுதி இளைத்துவிட் டாரே.

உரை

வானவெளியில் உள்ளே இருந்து உயிர்களுக்கு அருள் செய்யும் இறைவன், அவர்களின் கண்களுக்குள்ளும் இருந்து காட்சியைக் காட்டுபவனாகவும் கலந்து அருள் செய்கின்றான். அந்த இறைவனை வழிபட்டுப் பேரின்பத்தை அனுபவிக்காமல், உலக வாழ்க்கையையே பெரிதானது என்று மதித்துக்கொண்டு, இறைவனைப் பற்றி வீண் விளக்கங்கள் எழுதி வீண் பொழுதைக் கழிக்கின்றனர்.

வரி வாரியாக

  • வரி 1

    வானவெளியில் உள்ளே இருந்து உயிர்களுக்கு அருள் செய்யும் இறைவன்,

  • வரி 2

    அவர்களின் கண்களுக்குள்ளும் இருந்து காட்சியைக் காட்டுபவனாகவும் கலந்து அருள் செய்கின்றான்.

  • வரி 3

    அந்த இறைவனை வழிபட்டுப் பேரின்பத்தை அனுபவிக்காமல், உலக வாழ்க்கையையே பெரிதானது என்று மதித்துக்கொண்டு,

  • வரி 4

    இறைவனைப் பற்றி வீண் விளக்கங்கள் எழுதி வீண் பொழுதைக் கழிக்கின்றனர்.

திருமந்திரம் பாடல் #315

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout