தொடர்ந்து படிக்கread this section continuously
நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்துநில்லாக் குரம்பை நிலையென் றுணர்வீர்காள்எல்லா உயிர்க்கும் இறைவனே யாயினும்கல்லாதவர் நெஞ்சத்துக் காணஒண் ணாதே.
உரைmeaning
எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் நிலையில்லாத வாழ்க்கையையும், எதிலும் நிலையாக இருக்காத மனத்தையும், நிரந்தரமாக நிலைத்து இருக்காத உடம்பையும், எப்போதும் நிலையாக இருப்பவை என்று நினைத்துக்கொண்டு இருக்கும் உயிர்களே, ஈசன் எல்லா உயிர்களுக்கும் இறைவன் தான்; ஆனால் உண்மை ஞானத்தைக் கற்றுக்கொள்ளாத உயிர்களின் நெஞ்சத்தில் அவன் எப்போதுமே காட்சியாகக் காணக் கிடைக்க மாட்டான்.
O you souls who take the unstable life that goes on changing at every moment, and the mind that stays fixed on nothing, and the body that does not endure permanently, and think of them all as things that remain for ever: Isan is indeed God to every soul. But in the heart of the souls who have not learned true wisdom he will never at any time be found as a vision to be seen.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் நிலையில்லாத வாழ்க்கையையும், எதிலும் நிலையாக இருக்காத மனத்தையும் நிலையானவை என்று நெஞ்சத்தில் எண்ணி,
Taking the unstable life that goes on changing at every moment, and the mind that stays fixed on nothing, and holding them in the heart as though they were permanent,
- வரி 2Line 2
நிரந்தரமாக நிலைத்து இருக்காத உடம்பையும் நிலையானது என்று நினைத்துக்கொண்டு இருக்கும் உயிர்களே,
O you souls who also think of the body, which does not endure permanently, as a thing that remains,
- வரி 3Line 3
ஈசன் எல்லா உயிர்களுக்கும் இறைவன் தான்;
Isan is indeed God to every soul;
- வரி 4Line 4
ஆனால் உண்மை ஞானத்தைக் கற்றுக்கொள்ளாத உயிர்களின் நெஞ்சத்தில் அவன் எப்போதுமே காட்சியாகக் காணக் கிடைக்க மாட்டான்.
but in the heart of the souls who have not learned true wisdom he will never at any time be found as a vision to be seen.
திருமந்திரம் பாடல் #312





