தொடர்ந்து படிக்கread this section continuously
வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார்அல்லா தவர்கள் அறிவு பலவென்பார்எல்லா இடத்தும் உளன்எங்கள் தம்இறைகல்லா தவர்கள் கலப்புஅறி யாரே.
உரைmeaning
உண்மையான ஞானத்தை அடைந்து இறைவனை உள்ளத்துள் உணரக்கூடிய உயிர்கள், எப்போதும் அவனை வணங்கிப் பின்பற்றி நல்வழியிலேயே வாழ்கின்றனர். உண்மை ஞானம் பெறாதவர்கள் தமக்கு உலக ஞானம் நிறைய இருப்பதாகச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவன் எம்பெருமான் சதாசிவமூர்த்தி. அவனைப் பற்றிய உண்மை ஞானத்தைக் கற்று அறியாதவர்கள், தமக்குள்ளும் அவன் இரண்டறக் கலந்திருப்பதை அறிய மாட்டார்கள்.
The souls who attain true wisdom and can realise God within the heart worship him and follow him always, and live by the good path alone. Those who have not gained true wisdom go on declaring that they possess a great deal of worldly knowledge. The one who fills every place without remainder is our Lord Sadasivamurthy. Those who have not learned and known the true wisdom concerning him will never know that he is mingled inseparably within them as well.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உண்மையான ஞானத்தை அடைந்து இறைவனை உள்ளத்துள் உணரக்கூடிய உயிர்கள், எப்போதும் அவனை வணங்கிப் பின்பற்றி நல்வழியிலேயே வாழ்கின்றனர்.
The souls who attain true wisdom and can realise God within the heart worship him and follow him always, and live by the good path alone.
- வரி 2Line 2
உண்மை ஞானம் பெறாதவர்கள் தமக்கு உலக ஞானம் நிறைய இருப்பதாகச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.
Those who have not gained true wisdom go on declaring that they possess a great deal of worldly knowledge.
- வரி 3Line 3
எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவன் எம்பெருமான் சதாசிவமூர்த்தி.
The one who fills every place without remainder is our Lord Sadasivamurthy.
- வரி 4Line 4
அவனைப் பற்றிய உண்மை ஞானத்தைக் கற்று அறியாதவர்கள், தமக்குள்ளும் அவன் இரண்டறக் கலந்திருப்பதை அறிய மாட்டார்கள்.
Those who have not learned and known the true wisdom concerning him will never know that he is mingled inseparably within them as well.
திருமந்திரம் பாடல் #311





