தொடர்ந்து படிக்கread this section continuously
கல்லா தவரும் கருத்தறி காட்சியைவல்லா ரெனிலருட் கண்ணான் மதித்துளோர்கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோரும்கல்லாதவரும் இன்பம் காணுகி லாரே.
உரைmeaning
உலகக் கல்வி கற்காமலேயே, தனது கருத்தில் உள்ளத்துக்குள்ளே இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று உணர்ந்து அவனை அடையும் தகுதி பெற்றவர்களுக்கு, இறைவனது அருளே கண்ணாக இருந்து அவர்களுக்கு ஞானத்தைக் கொடுக்கும். இவர்கள் எப்போதும் உலகைப் பற்றி இருக்காமல் இறைவனைப் பற்றி இருந்து பேரின்பத்தைக் காண்பார்கள். உலகக் கல்வியை மட்டுமே கற்றறிந்து உண்மை ஞானத்தைக் கற்றுக்கொள்ளாத உயிர்கள் இறைவனின் பேரின்பத்தை எப்போதும் காண மாட்டார்கள்.
For those who, without having learned worldly education at all, realise within their own thought that one God dwells inside them and so become fit to reach him, God's grace itself stands as their eye and gives them wisdom. These hold not to the world but to God at all times, and they see the great bliss. The souls who learn only worldly education and never learn true wisdom will never at any time see God's great bliss.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உலகக் கல்வி கற்காமலேயே, தனது கருத்தில் உள்ளத்துக்குள்ளே இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று உணர்ந்து,
Those who, without having learned worldly education, realise within their own thought that one God dwells inside them,
- வரி 2Line 2
அவனை அடையும் தகுதி பெற்றவர்களுக்கு, இறைவனது அருளே கண்ணாக இருந்து அவர்களுக்கு ஞானத்தைக் கொடுக்கும்.
and so become fit to reach him: for them God's grace itself stands as their eye and gives them wisdom.
- வரி 3Line 3
இவர்கள் எப்போதும் உலகைப் பற்றி இருக்காமல் இறைவனைப் பற்றி இருந்து பேரின்பத்தைக் காண்பார்கள்.
These hold not to the world but to God at all times, and they see the great bliss.
- வரி 4Line 4
உலகக் கல்வியை மட்டுமே கற்றறிந்து உண்மை ஞானத்தைக் கற்றுக்கொள்ளாத உயிர்கள் இறைவனின் பேரின்பத்தை எப்போதும் காண மாட்டார்கள்.
The souls who learn only worldly education and never learn true wisdom will never at any time see God's great bliss.
திருமந்திரம் பாடல் #310





