திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 309

முதல் தந்திரம்21. கேள்வி கேட்டமைதல்

தொடர்ந்து படிக்கread this section continuously

வைத்துஉணர்ந் தான்மனத் தோடும் வாய்பேசிஒத்துஉணர்ந் தானுரு ஒன்றொடொன் றொவ்வாதச்சுழன் றாணி கலங்கினும் ஆதியைநச்சுஉணர்ந் தார்க்கே நணுகலு மாமே.

உரை

இறைவனை உள்ளத்தில் வைத்து மனத்தோடு ஒன்றி, தான் வேறு அல்ல இறைவன் வேறு அல்ல என்று உணர்ந்தவர்களும், தன் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் அனைத்தும் இறைவனின் வார்த்தையே என்று உணர்ந்தவர்களும், அசையும் பொருள் அசையாப் பொருள் என உருவங்கள் பலவாக இருந்தாலும் அந்த உருவங்கள் அனைத்திலும் இருப்பவன் இறைவன் ஒருவனே என்று உணர்ந்தவர்களும், உடம்பு என்னும் அச்சிலிருந்து உயிர் என்னும் ஆணி கழன்று விழும்போது, ஆதியான சிவபெருமானை விரும்பி உணர்ந்தவர்களுக்கே அவனை அணுகி அடைய முடியும்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனை உள்ளத்தில் வைத்து மனத்தோடு ஒன்றி, தான் வேறு அல்ல இறைவன் வேறு அல்ல என்று உணர்ந்தவர்களும், தன் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் அனைத்தும் இறைவனின் வார்த்தையே என்று உணர்ந்தவர்களும்,

  • வரி 2

    அசையும் பொருள் அசையாப் பொருள் என உருவங்கள் பலவாக இருந்தாலும், அந்த உருவங்கள் அனைத்திலும் இருப்பவன் இறைவன் ஒருவனே என்று உணர்ந்தவர்களும்,

  • வரி 3

    உடம்பு என்னும் அச்சிலிருந்து உயிர் என்னும் ஆணி கழன்று விழும்போது, ஆதியான சிவபெருமானை

  • வரி 4

    விரும்பி உணர்ந்தவர்களுக்கே அவனை அணுகி அடைய முடியும்.

திருமந்திரம் பாடல் #309

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout