தொடர்ந்து படிக்கread this section continuously
புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன்இகழநின் றார்க்கும் இடும்பைக் கிடமாமகிழநின் றாதியை ஓதி உணராக்கழியநின் றார்க்கொரு கற்பசு வாமே.
உரைmeaning
இறைவனைக் கேள்வி ஞானத்தின் மூலம் உணர்ந்து போற்றிப் புகழ்ந்து இருக்கின்ற அடியவர்களுக்கு எப்போதும் துணையாக இருப்பார் ஆதிகாலத்திலிருந்து இருக்கும் ஈசன். இறைவனை இகழ்ந்து பேசி இருக்கின்ற மற்றவர்களுக்கு மறக்கருணையினால் துன்பத்தைக் கொடுத்து வினை தீர்ப்பான். அப்படிப்பட்ட ஆதியான இறைவனின் பெருமைகளை உள்ளம் மகிழ்ந்து ஓதி உணராமல் இருப்பவர்களுக்கு இறைவன் கல்லால் ஆன பசு போன்றவன். கல்லாலான பசு எப்படிப் பாலைத் தராதோ, அதுபோல அவர்களுக்கு இறைவனது அருளும் எப்போதும் கிடைக்காது.
God, the ancient one who has existed from the beginning, will always be a companion to the devotees who have realised him through the wisdom of questioning and stand praising and glorifying him. To others who stand speaking ill of God, he will, out of a grace hidden within, give them suffering and settle their karma. But to those who do not recite and realise with a joyful heart the greatness of that same ancient God, God is like a cow made of stone. Just as a cow made of stone can never give milk, so too his grace will never reach them.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவனைக் கேள்வி ஞானத்தின் மூலம் உணர்ந்து போற்றிப் புகழ்ந்து இருக்கின்ற அடியவர்களுக்கு எப்போதும் துணையாக இருப்பார் ஆதிகாலத்திலிருந்து இருக்கும் ஈசன்.
God, the ancient one who has existed from the beginning, will always be a companion to the devotees who have realised him through the wisdom of questioning and stand praising and glorifying him.
- வரி 2Line 2
இறைவனை இகழ்ந்து பேசி இருக்கின்ற மற்றவர்களுக்கு மறக்கருணையினால் துன்பத்தைக் கொடுத்து வினை தீர்ப்பான்.
To others who stand speaking ill of God, he will, out of a grace hidden within, give them suffering and settle their karma.
- வரி 3Line 3
அப்படிப்பட்ட ஆதியான இறைவனின் பெருமைகளை உள்ளம் மகிழ்ந்து ஓதி உணராமல் இருப்பவர்களுக்கு இறைவன் கல்லால் ஆன பசு போன்றவன்.
But to those who do not recite and realise with a joyful heart the greatness of that same ancient God, God is like a cow made of stone.
- வரி 4Line 4
கல்லாலான பசு எப்படிப் பாலைத் தராதோ, அதுபோல அவர்களுக்கு இறைவனது அருளும் எப்போதும் கிடைக்காது.
Just as a cow made of stone can never give milk, so too his grace will never reach them.
திருமந்திரம் பாடல் #308





