திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 307

முதல் தந்திரம்21. கேள்வி கேட்டமைதல்

தொடர்ந்து படிக்கread this section continuously

உறுதுணை யாவ துயிரும் உடம்பும்உறுதுணை யாவ துலகுறு கேள்விசெறிதுணை யாவ சிவனடிச் சிந்தைபெறுதுணை கேட்கில் பிறப்பில்லை தானே.

உரை

உலக வாழ்க்கை வாழ்ந்து இறைவனை அடைய உற்ற துணையாக இருப்பது உயிரும் உடலும் ஆகும். அந்த உயிர் சிவசிந்தனை பெறுவதற்கு உற்ற துணையாக இருப்பது கல்வியும் கேள்வியும் ஆகும். அந்தக் கேள்வி ஞானத்தால் சிவனது திருவடியைச் சிந்தையில் வைத்திருப்பது இறைவனை அடைய தக்க துணையாகும். அத்தகைய மிகப்பெரிய துணையைக் கேட்டுப் பெற்றால் பிறவியில்லை.

வரி வாரியாக

  • வரி 1

    உலக வாழ்க்கை வாழ்ந்து இறைவனை அடைய உற்ற துணையாக இருப்பது உயிரும் உடலும் ஆகும்.

  • வரி 2

    அந்த உயிர் சிவசிந்தனை பெறுவதற்கு உற்ற துணையாக இருப்பது கல்வியும் கேள்வியும் ஆகும்.

  • வரி 3

    அந்தக் கேள்வி ஞானத்தால் சிவனது திருவடியைச் சிந்தையில் வைத்திருப்பது இறைவனை அடைய தக்க துணையாகும்.

  • வரி 4

    அத்தகைய மிகப்பெரிய துணையைக் கேட்டுப் பெற்றால் பிறவியில்லை.

திருமந்திரம் பாடல் #307

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout