திருமூலர் அருளிய திருமந்திரம்
21. கேள்வி கேட்டமைதல்

முதல் தந்திரம் பாடல் 300–309 (10 பாடல்கள்)

அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்மறங்கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும்புறங்கேட்டும் பொன்னுரை மேனிஎம் ஈசன்திறங்கேட்டும் பெற்ற சிவகதி தானே.

தேவர் பிரான்றனைத் திவ்விய மூர்த்தியையாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்ஓதுமின் கேண்மின் உணர்மின் உணர்ந்தபின்ஓதி உணர்ந்துஅவர் ஓங்கிநின் றாரே.

மயன்பணி கேட்பது மாநந்தி கேட்பின்அயன்பணி கேட்பது அரன்பணி யால்சிவன்பணி கேட்பவர் தேவரும் ஆவர்பயன்பணி கேட்பது பற்றது வாமே.

பெருமான் இவனென்று பேசி யிருக்கும்திருமா னிடர்பின்னைத் தேவரும் ஆவர்வருமா தவர்க்கு மகிழ்ந்தருள் செய்யும்அருமா தவத்தெங்கள் ஆதிப் பிரானே.

ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்பேசி யிருந்து பிதற்றி மகிழ்வெய்தின்நேசமும் ஆகும் நிகழொளி யாய்நின்றுவாசமலர்க் கந்தமாய் மன்னிநின் றானே.

விழுப்பமும் கேள்வியும் மெய்நின்ற ஞானத்தொழுக்கமும் சிந்தை உணர்கின்ற போதுவழுக்கி விழாவிடில் வானவர் கோனும்இழுக்கின்றி எண்ணிலி காலம தாமே.

சிறியார் மணற்சோற்றில் தேக்கிடு மாபோல்செறிவால் அனுபோகம் சித்திக்கும் என்னில்குறியாத தொன்றைக் குறியாதார் தம்மைஅறியா திருந்தார் அவரவர் அன்றே.

உறுதுணை யாவ துயிரும் உடம்பும்உறுதுணை யாவ துலகுறு கேள்விசெறிதுணை யாவ சிவனடிச் சிந்தைபெறுதுணை கேட்கில் பிறப்பில்லை தானே.

புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன்இகழநின் றார்க்கும் இடும்பைக் கிடமாமகிழநின் றாதியை ஓதி உணராக்கழியநின் றார்க்கொரு கற்பசு வாமே.

வைத்துஉணர்ந் தான்மனத் தோடும் வாய்பேசிஒத்துஉணர்ந் தானுரு ஒன்றொடொன் றொவ்வாதச்சுழன் றாணி கலங்கினும் ஆதியைநச்சுஉணர்ந் தார்க்கே நணுகலு மாமே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #300

1 / 10

0:000:00
21. கேள்வி கேட்டமைதல்பாடல் 300

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com