திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 302

முதல் தந்திரம்21. கேள்வி கேட்டமைதல்

தொடர்ந்து படிக்கread this section continuously

மயன்பணி கேட்பது மாநந்தி கேட்பின்அயன்பணி கேட்பது அரன்பணி யால்சிவன்பணி கேட்பவர் தேவரும் ஆவர்பயன்பணி கேட்பது பற்றது வாமே.

உரை

குருநாதராக இருந்து இறைவன் வழங்கிய சிவ ஆகமங்களைக் கேட்டு உணர்ந்தால், அதன் மூலம் திருமால் இறைவனின் ஆணை பெற்றுக் காக்கும் தொழிலைப் புரிவதையும், பிரம்மன் இறைவனின் ஆணை பெற்றுப் படைக்கும் தொழிலைப் புரிவதையும், உருத்திரன் இறைவனின் ஆணை பெற்று அழிக்கும் தொழிலைப் புரிவதையும் தெரிந்து கொள்ளலாம். அவ்வாறு தெரிந்து உணர்ந்தபின் இறைவனிடம் சிவபணி வேண்டும் என்று எவர் ஒருவர் கேட்டுப் பெறுகிறாரோ, அவரே அடுத்துத் தேவர்களாக மாறி, என்றும் அழியாத இறைவனின் திருவடிகளைப் பற்றிக்கொண்டு சிவபணி புரியலாம்.

குறிப்பு: அனைத்து தேவர்களும் சிவனடியாராக இருந்து இறைவனிடம் சிவபணி கேட்டுப் பெற்று, தேவர்களாக நின்று அருள் புரிபவர்கள் தான்.

வரி வாரியாக

  • வரி 1

    குருநாதராக இருந்து இறைவன் வழங்கிய சிவ ஆகமங்களைக் கேட்டு உணர்ந்தால், அதன் மூலம் திருமால் இறைவனின் ஆணை பெற்றுக் காக்கும் தொழிலைப் புரிவதையும்

  • வரி 2

    பிரம்மன் இறைவனின் ஆணை பெற்றுப் படைக்கும் தொழிலைப் புரிவதையும், உருத்திரன் இறைவனின் ஆணை பெற்று அழிக்கும் தொழிலைப் புரிவதையும் தெரிந்து கொள்ளலாம்.

  • வரி 3

    அவ்வாறு தெரிந்து உணர்ந்தபின் இறைவனிடம் சிவபணி வேண்டும் என்று எவர் ஒருவர் கேட்டுப் பெறுகிறாரோ, அவரே அடுத்துத் தேவர்களாக மாறி,

  • வரி 4

    என்றும் அழியாத இறைவனின் திருவடிகளைப் பற்றிக்கொண்டு சிவபணி புரியலாம்.

திருமந்திரம் பாடல் #302

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout