திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 303

முதல் தந்திரம்21. கேள்வி கேட்டமைதல்

தொடர்ந்து படிக்கread this section continuously

பெருமான் இவனென்று பேசி யிருக்கும்திருமா னிடர்பின்னைத் தேவரும் ஆவர்வருமா தவர்க்கு மகிழ்ந்தருள் செய்யும்அருமா தவத்தெங்கள் ஆதிப் பிரானே.

உரை

தெய்வங்களுக்கெல்லாம் மேலான தெய்வம் ஒருவன் சிவன் என்பதை அறிந்து கொள்ளத் தனக்குள் பேசிக் கேள்வி கேட்டு, கேள்வி ஞானத்தின் மூலம் பெரிய தவம் புரிந்த மானிடர்கள் தேவர்களாவதற்கு மகிழ்ந்து அருள் செய்கிறார், தவக் கோலத்தையே தனது கோலமாக உடைய ஆதியிலிருந்து இருக்கும் சிவபெருமான்.

குறிப்பு: அமைதியாகப் பேசாமல் அமர்ந்து இறைவன் யார் என்று தனக்குள்ளேயே கேள்வி கேட்டு, இறைவன் அருளால் இறைவனை அடைவதும் பெரிய தவமே.

வரி வாரியாக

  • வரி 1

    தெய்வங்களுக்கெல்லாம் மேலான தெய்வம் ஒருவன் சிவன் என்பதை அறிந்து கொள்ளத் தனக்குள் பேசிக் கேள்வி கேட்டு,

  • வரி 2

    கேள்வி ஞானத்தின் மூலம் பெரிய தவம் புரிந்த மானிடர்கள் தேவர்களாவதற்கு

  • வரி 3

    மகிழ்ந்து அருள் செய்கிறார்,

  • வரி 4

    தவக் கோலத்தையே தனது கோலமாக உடைய ஆதியிலிருந்து இருக்கும் சிவபெருமான்.

திருமந்திரம் பாடல் #303

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout