திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 301

முதல் தந்திரம்21. கேள்வி கேட்டமைதல்

தொடர்ந்து படிக்கread this section continuously

தேவர் பிரான்றனைத் திவ்விய மூர்த்தியையாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்ஓதுமின் கேண்மின் உணர்மின் உணர்ந்தபின்ஓதி உணர்ந்துஅவர் ஓங்கிநின் றாரே.

உரை

தேவர்களின் தலைவனாக இருப்பவனும் அனைத்திலும் மேலானவனுமான இறைவனை ஒருவரும் அவ்வளவு எளிதில் அறிந்து கொள்ளுவதில்லை. இறைவன் என்று ஒருவர் இருக்கிறார் என்று தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்த பின் அவரை அடைய அவரின் நாமத்தைச் சொல்லுங்கள்; இறைவனை அறிந்த குருவிடம் அவரைப் பற்றிக் கேட்டு உணர்ந்து கொள்ளுங்கள். இறைவனின் நாமங்களை ஒருவர் ஓதி உணர்ந்துவிட்டால், அவர் இறைவனின் அடியார்களின் மத்தியில் உயர்ந்து நிற்பார்.

வரி வாரியாக

  • வரி 1

    தேவர்களின் தலைவனாக இருப்பவனும் அனைத்திலும் மேலானவனுமான இறைவனை ஒருவரும் அவ்வளவு எளிதில் அறிந்து கொள்ளுவதில்லை.

  • வரி 2

    இறைவன் என்று ஒருவர் இருக்கிறார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • வரி 3

    தெரிந்த பின் அவரை அடைய அவரின் நாமத்தைச் சொல்லுங்கள்; இறைவனை அறிந்த குருவிடம் அவரைப் பற்றிக் கேட்டு உணர்ந்து கொள்ளுங்கள்.

  • வரி 4

    இறைவனின் நாமங்களை ஒருவர் ஓதி உணர்ந்துவிட்டால், அவர் இறைவனின் அடியார்களின் மத்தியில் உயர்ந்து நிற்பார்.

திருமந்திரம் பாடல் #301

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout