திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 300

முதல் தந்திரம்21. கேள்வி கேட்டமைதல்

தொடர்ந்து படிக்கread this section continuously

அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்மறங்கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும்புறங்கேட்டும் பொன்னுரை மேனிஎம் ஈசன்திறங்கேட்டும் பெற்ற சிவகதி தானே.

உரை

அறநூல்கள் சொல்லும் உண்மைகளைக் கேட்டும், பாடல் #224ல் உள்ளபடி இருக்கும் அந்தணர்களின் அறிவுரைகளைக் கேட்டும், பாவங்கள் இவை எனக் கூறும் நீதிநூல்கள் கூறுவதைக் கேட்டும், தேவர்களின் வழிபாட்டில் கூறிய மந்திரங்களைக் கேட்டும், இறைவனைப் பற்றிச் சொல்லாத பிற நூல்களில் சொல்லப்படும் நல்ல கருத்துக்களைக் கேட்டும், பொன் போன்ற எம் ஈசனின் திருமேனியாக இருக்கும் அவன் நாமத்தையும் அதன் தன்மைகளையும் கேட்டு, அதன்படி நடந்தால் சிவகதி அடையலாம்.

வரி வாரியாக

  • வரி 1

    அறநூல்கள் சொல்லும் உண்மைகளைக் கேட்டும், பாடல்

  • வரி 2

    பாவங்கள் இவை எனக் கூறும் நீதிநூல்கள் கூறுவதைக் கேட்டும், தேவர்களின் வழிபாட்டில் கூறிய மந்திரங்களைக் கேட்டும்,

  • வரி 3

    இறைவனைப் பற்றிச் சொல்லாத பிற நூல்களில் சொல்லப்படும் நல்ல கருத்துக்களைக் கேட்டும், பொன் போன்ற எம் ஈசனின் திருமேனியாக இருக்கும்

  • வரி 4

    அவன் நாமத்தையும் அதன் தன்மைகளையும் கேட்டு, அதன்படி நடந்தால் சிவகதி அடையலாம்.

திருமந்திரம் பாடல் #300

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout