திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 305

முதல் தந்திரம்21. கேள்வி கேட்டமைதல்

தொடர்ந்து படிக்கread this section continuously

விழுப்பமும் கேள்வியும் மெய்நின்ற ஞானத்தொழுக்கமும் சிந்தை உணர்கின்ற போதுவழுக்கி விழாவிடில் வானவர் கோனும்இழுக்கின்றி எண்ணிலி காலம தாமே.

உரை

சிவபெருமானின் சிறப்பைப் படித்தும் கேட்டும் அறிந்து கொள்வோம். அதனால் கிடைக்கும் ஞானத்தினால் ஒழுக்கம் பெறுவோம். ஒழுக்கத்தினால் நம்மிடம் உண்டாகும் மாற்றத்தைச் சிந்தையில் உணர்வோம். உணர்ந்து ஒழுக்கத்தில் இருந்து வழுக்கி விடாமல் தொடர்ந்து நிலையாக இருந்தோமானால், வானத்திலிருக்கும் தேவர்களுக்கெல்லாம் அரசனான இறைவனும், அவர்களுக்கு ஒரு குறையும் இல்லாது எண்ணிலடங்காத காலம் அவர்களுடனே இருந்து பேரின்பத்தை அருளுவான்.

வரி வாரியாக

  • வரி 1

    சிவபெருமானின் சிறப்பைப் படித்தும் கேட்டும் அறிந்து கொள்வோம்.

  • வரி 2

    அதனால் கிடைக்கும் ஞானத்தினால் ஒழுக்கம் பெறுவோம். ஒழுக்கத்தினால் நம்மிடம் உண்டாகும் மாற்றத்தைச் சிந்தையில் உணர்வோம்.

  • வரி 3

    உணர்ந்து ஒழுக்கத்தில் இருந்து வழுக்கி விடாமல் தொடர்ந்து நிலையாக இருந்தோமானால், வானத்திலிருக்கும் தேவர்களுக்கெல்லாம் அரசனான இறைவனும்,

  • வரி 4

    அவர்களுக்கு ஒரு குறையும் இல்லாது எண்ணிலடங்காத காலம் அவர்களுடனே இருந்து பேரின்பத்தை அருளுவான்.

திருமந்திரம் பாடல் #305

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout