குறிப்பறிந் தேன்உட லோடுயிர் கூடிச்செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானைமறிப்பறி யாதுவந் துள்ளம் புகுந்தான்கறிப்பறி யாமிகும் கல்விகற் றேனே.
கற்றறி வாளர் கருதிய காலத்துக்கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டுகற்றறி வாளர் கருதி உரைசெய்யும்கற்றறி காட்டக் கயலுள வாக்குமே.
நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல்கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்மற்றொன்று இலாத மணிவிளக் காமே.
கல்வி யுடையார் கழிந்தோடிப் போகின்றார்பல்லி யுடையார் பாம்பரிந்து உண்கின்றார்எல்லியும் காலையும் ஏத்தும் இறைவனைவல்லியுள் வாதித்தது காயமு மாமே.
துணையது வாய்வரும் தூயநற் சோதிதுணையது வாய்வரும் தூயநற் சொல்லாம்துணையது வாய்வரும் தூயநற் கந்தம்துணையது வாய்வரும் தூயநற் கல்வியே.
நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்பாலொன்று பற்றினால் பண்பின் பயன்கெடும்கோலொன்று பற்றினால் கூடா பறவைகள்மாலொன்று பற்றி மயங்குகின் றார்களே.
ஆய்ந்துகொள் வார்க்கரன் அங்கே வெளிப்படும்தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும்ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்குவாய்ந்தது மனமல்கு நூலேணி யாமே.
வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன்கழித்துணை யாங்கற் றிலாதவர் சிந்தைஒழித்துணை யாமும்ப ராமுல கேழும்வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே.
பற்றது பற்றின் பரமனைப் பற்றுமின்முற்றது எல்லா முதல்வன் அருள்பெறில்கிற்ற விரகின் கிளரொளி வானவர்கற்றுஅவர் பேரின்பம் உற்றுநின் றாரே.
கடலுடை யான்மலை யான்ஐந்து பூதத்துடலுடை யான்பல ஊழிதொ றூழிஅடல்விடை ஏறும் அமரர்கள் நாதன்இடமுடை யார்நெஞ்சத் திலிருந் தானே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #290
1 / 10




