திருமூலர் அருளிய திருமந்திரம்
19. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

முதல் தந்திரம் பாடல் 280–289 (10 பாடல்கள்)

இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்குமகிழ்ந்தன்பு செய்யு மருளது வாமே.

இன்பப் பிறவிக் கியல்வது செய்தவன்துன்பப் பிறவித் தொழில்பல எண்ணினும்அன்பிற் கலவிசெய் தாதிப் பிரான்வைத்தமுன்புஇப் பிறவி முடிவது தானே.

அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளிஇன்புறு கண்ணியொ டேற்க இசைந்தனதுன்புறு கண்ணியைந் தொடும் துடக்கற்றுநண்புறு சிந்தையொடு நாடுமின் நீரே.

புணர்ச்சியுள் ஆயிழை மேலன்பு போலஉணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லார்க்குஉணர்ச்சியில் லாது குலாவி உலாவிஅணைத்தலும் இன்பம் அதுஇது வாமே.

உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியைச்சித்தர்கள் என்றும் தெரிந்தறி வாரில்லைபத்திமை யாலே பணிந்தடி யார்தொழமுத்தி கொடுத்துஅவர் முன்புநின் றானே.

கண்டேன் கமழ்தரு கொன்றையி னானடிகண்டேன் கரியுரி யான்றன் கழலிணைகண்டேன் கமல மலருறை வானடிகண்டேன் கழலதுஎன் அன்பினுள் யானே.

நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்றும்பரில் வானவர் ஓதுந் தலைவனைஇன்பனை இன்பத் திடைநின் றிரதிக்கும்அன்பனை யாரும் அறியவுமி லாரே.

முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்அன்பில் இறைவனை யாமறி வோமென்பர்இன்பப் பிறப்பும் இறப்பும் இலான்நந்திஅன்பில் அவனை அறியவுமி லாரே.

ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைபாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்தேசுற் றறிந்து செயலற் றிருந்திடில்ஈசன்வந்து எம்மிடை ஈண்டிநின் றானே.

விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையைஎட்டுமென் னாருயி ராய்நின்ற ஈசனைமட்டுக் கலப்பதுவே மஞ்சன மாமே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #280

1 / 10

0:000:00
19. அன்பு செய்வாரை அறிவன் சிவன்பாடல் 280

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com