திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 286

முதல் தந்திரம்19. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

தொடர்ந்து படிக்கread this section continuously

நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்றும்பரில் வானவர் ஓதுந் தலைவனைஇன்பனை இன்பத் திடைநின் றிரதிக்கும்அன்பனை யாரும் அறியவுமி லாரே.

உரை

நம்மோடு எப்போதும் இருக்கும் இறைவனை, அனைத்து விதமான பொருளாகவும் இருப்பவன் என்று விண்ணுலகத்திலிருக்கும் தேவர்களெல்லாம் போற்றித் துதிக்கும் தலைவனை, பேரின்பத்தின் உருவமாக இருப்பவனை, பேரின்பத்தின் இடையே நின்று பெருங்கருணையை வழங்கும் பேரன்பு மிக்க பெருமானை, உயிர்கள் எவரும் அறிந்து கொள்ளாமல் இருக்கின்றார்களே!

வரி வாரியாக

  • வரி 1

    நம்மோடு எப்போதும் இருக்கும் இறைவனை, அனைத்து விதமான பொருளாகவும் இருப்பவன் என்று

  • வரி 2

    விண்ணுலகத்திலிருக்கும் தேவர்களெல்லாம் போற்றித் துதிக்கும் தலைவனை,

  • வரி 3

    பேரின்பத்தின் உருவமாக இருப்பவனை, பேரின்பத்தின் இடையே நின்று பெருங்கருணையை வழங்கும்

  • வரி 4

    பேரன்பு மிக்க பெருமானை உயிர்கள் எவரும் அறிந்து கொள்ளாமல் இருக்கின்றார்களே!

திருமந்திரம் பாடல் #286

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout