திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 285

முதல் தந்திரம்19. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

தொடர்ந்து படிக்கread this section continuously

கண்டேன் கமழ்தரு கொன்றையி னானடிகண்டேன் கரியுரி யான்றன் கழலிணைகண்டேன் கமல மலருறை வானடிகண்டேன் கழலதுஎன் அன்பினுள் யானே.

உரை

சுகந்தமான வாசனை கொண்ட கொன்றை மலர்களைச் சூடியிருக்கின்றவனின் திருவடிகளை யான் கண்டு கொண்டேன். அறியாமையாகிய யானையை கதறும்படி பிளந்து அதன் தோலை உரித்துப் போர்வையாகத் தன் மேல் போர்த்திக்கொண்டவனின் காதிலிருக்கும் அழகிய கழல்களை யான் கண்டு கொண்டேன். சகஸ்ரர தளத்தில் ஆயிரம் இதழ்கொண்ட தாமரை மலரின் மேல் வீற்றிருக்கும் இறைவனின் திருவடிகளை யான் கண்டு கொண்டேன். இறைவனின் மேல் யான் கொண்ட பேரன்பால், அழகிய கழல்களை அணிந்து அன்பே உருவாமாய் நின்ற அவனது திருமேனியை யான் கண்டு கொண்டேன்.

வரி வாரியாக

  • வரி 1

    சுகந்தமான வாசனை கொண்ட கொன்றை மலர்களைச் சூடியிருக்கின்றவனின் திருவடிகளை யான் கண்டு கொண்டேன்.

  • வரி 2

    அறியாமையாகிய யானையை கதறும்படி பிளந்து அதன் தோலை உரித்துப் போர்வையாகத் தன் மேல் போர்த்திக்கொண்டவனின் காதிலிருக்கும் அழகிய கழல்களை யான் கண்டு கொண்டேன்.

  • வரி 3

    சகஸ்ரர தளத்தில் ஆயிரம் இதழ்கொண்ட தாமரை மலரின் மேல் வீற்றிருக்கும் இறைவனின் திருவடிகளை யான் கண்டு கொண்டேன்.

  • வரி 4

    இறைவனின் மேல் யான் கொண்ட பேரன்பால், அழகிய கழல்களை அணிந்து அன்பே உருவாமாய் நின்ற அவனது திருமேனியை யான் கண்டு கொண்டேன்.

திருமந்திரம் பாடல் #285

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout