தொடர்ந்து படிக்கread this section continuously
உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியைச்சித்தர்கள் என்றும் தெரிந்தறி வாரில்லைபத்திமை யாலே பணிந்தடி யார்தொழமுத்தி கொடுத்துஅவர் முன்புநின் றானே.
உரைmeaning
அனைத்து உயிர்களிடம் உண்மையான அன்பு வைத்து இருக்கும் அன்பர்களுடன் சேர்ந்து இருக்கும் பேரொளியான இறைவனை, வெறும் சிந்தனை மட்டுமே செய்பவர்களால் அவன் எப்படி இருப்பான் என்பதைத் தெரிந்து கொள்ளவோ, அவனது பேரன்பையோ அறிந்து கொள்ளவோ முடியாது. சிந்தனையை விட்டுவிட்டு அவன் மீது உண்மையான பக்தி கொண்டு அவன் திருவடிகளைப் பணிந்து தொழுது வருபவர்களுக்கு, அவன் முக்தியையும் கொடுத்து அவர்களின் கண் முன்பும் வந்து நிற்பான் இறைவன்.
Those who merely think about the light-formed God, who abides together with devotees who hold true love toward all beings, cannot come to know what he is truly like, nor come to know his supreme love. But to those who set aside mere thinking and, holding true devotion toward him, bow and worship his holy feet, God grants liberation and comes and stands before their very eyes.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
அனைத்து உயிர்களிடம் உண்மையான அன்பு வைத்து இருக்கும் அன்பர்களுடன் சேர்ந்து இருக்கும் பேரொளியான இறைவனை,
Those who merely think about the light-formed God, who abides together with devotees who hold true love toward all beings,
- வரி 2Line 2
வெறும் சிந்தனை மட்டுமே செய்பவர்களால் அவன் எப்படி இருப்பான் என்பதைத் தெரிந்து கொள்ளவோ, அவனது பேரன்பையோ அறிந்து கொள்ளவோ முடியாது.
cannot come to know what he is truly like, nor come to know his supreme love.
- வரி 3Line 3
சிந்தனையை விட்டுவிட்டு அவன் மீது உண்மையான பக்தி கொண்டு அவன் திருவடிகளைப் பணிந்து தொழுது வருபவர்களுக்கு,
But to those who set aside mere thinking and, holding true devotion toward him, bow and worship his holy feet,
- வரி 4Line 4
அவன் முக்தியையும் கொடுத்து அவர்களின் கண் முன்பும் வந்து நிற்பான் இறைவன்.
God grants liberation and comes and stands before their very eyes.
திருமந்திரம் பாடல் #284





