தொடர்ந்து படிக்கread this section continuously
ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைபாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்தேசுற் றறிந்து செயலற் றிருந்திடில்ஈசன்வந்து எம்மிடை ஈண்டிநின் றானே.
உரைmeaning
இரவு பகல் என்று பார்க்காமல் எப்போதும் தம்மை தூய்மையான அன்பில் வைத்துப் போற்றித் தொழும் உயிர்களை சிவபெருமான் அறிவான். ஜோதியாக அவன் வந்து கலந்துவிடுவான் என்பதை அறிந்து கொண்டு எந்தச் செயலுமின்றி நாம் தியானத்தில் இருந்தாலே போதும். அந்தச் சிவபெருமானே நமது முன்னால் வந்து நம்மோடு அன்பில் கலந்து நிற்பான்.
Shiva knows the souls who, without regard to night or day, always hold themselves in pure love, praising and worshipping him. Knowing that he will come as light and merge with us, it is enough that we remain in meditation without any other effort. That very Shiva will come before us and stand merged with us in love.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இரவு பகல் என்று பார்க்காமல் எப்போதும் தம்மை தூய்மையான அன்பில் வைத்துப் போற்றித் தொழும் உயிர்களை
The souls who, without regard to night or day, always hold themselves in pure love,
- வரி 2Line 2
சிவபெருமான் அறிவான்.
praising and worshipping him, Shiva knows.
- வரி 3Line 3
ஜோதியாக அவன் வந்து கலந்துவிடுவான் என்பதை அறிந்து கொண்டு எந்தச் செயலுமின்றி நாம் தியானத்தில் இருந்தாலே போதும்.
Knowing that he will come as light and merge with us, it is enough that we remain in meditation without any other effort.
- வரி 4Line 4
அந்தச் சிவபெருமானே நமது முன்னால் வந்து நம்மோடு அன்பில் கலந்து நிற்பான்.
That very Shiva will come before us and stand merged with us in love.
திருமந்திரம் பாடல் #288





