தொடர்ந்து படிக்கread this section continuously
விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையைஎட்டுமென் னாருயி ராய்நின்ற ஈசனைமட்டுக் கலப்பதுவே மஞ்சன மாமே.
உரைmeaning
இளமை இருக்கும்போது விட்டுவிட்டு வயதான பிறகு அனைத்திலும் உயர்ந்த ஜோதி வடிவான இறைவனை பிடித்துக்கொள்ளலாம் என்று நினைப்பது மூடத்தனம் ஆகும். செய்யும் அனைத்து காரியங்களிலும் இறைவனை நினைத்துக்கொண்டே வாழ்ந்து வருவது இறைவனை சென்றடைய வழிவகுத்து என்றும் அழியாத பெருமையை கொடுக்கும். அனைத்து உயிர்களுக்குள்ளும் ஆருயிராக இருக்கும் சிவபெருமானுடன் அளவில்லாத பேரன்பில் கலந்து இருப்பதுதான் உயிர்களுக்குள் இருக்கும் இறைவனுக்குச் செய்யும் மிகச்சிறந்த அபிஷேகம் ஆகும்.
It is foolishness to think that one can let go of God in youth, the God who is supreme light above all things, and take hold of him only after growing old. Living with thought of God fixed in every action one does opens the way to reach him and grants an everlasting glory. Merging in boundless love with Shiva, who is the very life-breath within every soul, this alone is the finest abhisheka one can offer the God who dwells within all souls.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இளமை இருக்கும்போது விட்டுவிட்டு வயதான பிறகு அனைத்திலும் உயர்ந்த ஜோதி வடிவான இறைவனை பிடித்துக்கொள்ளலாம் என்று நினைப்பது மூடத்தனம் ஆகும்.
It is foolishness to think that one can let go of God in youth, the God who is supreme light above all things, and take hold of him only after growing old.
- வரி 2Line 2
செய்யும் அனைத்து காரியங்களிலும் இறைவனை நினைத்துக்கொண்டே வாழ்ந்து வருவது இறைவனை சென்றடைய வழிவகுத்து என்றும் அழியாத பெருமையை கொடுக்கும்.
Living with thought of God fixed in every action one does opens the way to reach him and grants an everlasting glory.
- வரி 3Line 3
அனைத்து உயிர்களுக்குள்ளும் ஆருயிராக இருக்கும் சிவபெருமானுடன் அளவில்லாத பேரன்பில் கலந்து இருப்பதுதான்,
Merging in boundless love with Shiva, who is the very life-breath within every soul,
- வரி 4Line 4
உயிர்களுக்குள் இருக்கும் இறைவனுக்குச் செய்யும் மிகச்சிறந்த அபிஷேகம் ஆகும்.
this alone is the finest abhisheka one can offer the God who dwells within all souls.
திருமந்திரம் பாடல் #289





