தொடர்ந்து படிக்கread this section continuously
குறிப்பறிந் தேன்உட லோடுயிர் கூடிச்செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானைமறிப்பறி யாதுவந் துள்ளம் புகுந்தான்கறிப்பறி யாமிகும் கல்விகற் றேனே.
உரைmeaning
உயிர்கள் உலகத்தில் வினைப்பயனால் பிறவி எடுக்கும் காரணத்தைத் தெரிந்து கொண்டேன். உயிர்களின் மேல் கொண்ட பெருங்கருணையால் அவர்கள் எடுக்கும் உடலோடு உயிராக இறைவனும் கலந்திருப்பதை தெரிந்து கொண்டேன். தேவர்களுக்கெல்லாம் மிகப் பெரிய மகாதேவனான இறைவன் தன்மீது தூய்மையான அன்பு கொண்ட உயிர்களுக்குத் தடையேதும் செய்யாமல் உடனே அவர்களின் உள்ளத்தில் புகுந்து வீற்றிருப்பதையும் தெரிந்து கொண்டேன். இவையெல்லாம் படிப்பதின் மூலமாகவோ அல்லது கேட்பதின் மூலமோ கற்றுக்கொள்ள முடியாத பேரறிவு ஞானத்தை இறைவனது அருளால் கற்றுக்கொண்டேன்.
I came to know the reason why souls take birth in this world through the fruit of their deeds. I came to know that, out of the great compassion he bears souls, God himself merges as the life within the body they take. I also came to know that God, the Mahadeva greatest among all the gods, enters at once and dwells within the hearts of souls who hold pure love toward him, without any hindrance. All this, a supreme wisdom that cannot be learned through reading or through hearing, I learned through God's grace.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உயிர்கள் உலகத்தில் வினைப்பயனால் பிறவி எடுக்கும் காரணத்தைத் தெரிந்து கொண்டேன்.
I came to know the reason why souls take birth in this world through the fruit of their deeds.
- வரி 2Line 2
உயிர்களின் மேல் கொண்ட பெருங்கருணையால் அவர்கள் எடுக்கும் உடலோடு உயிராக இறைவனும் கலந்திருப்பதை தெரிந்து கொண்டேன்.
I came to know that, out of the great compassion he bears souls, God himself merges as the life within the body they take.
- வரி 3Line 3
தேவர்களுக்கெல்லாம் மிகப் பெரிய மகாதேவனான இறைவன் தன்மீது தூய்மையான அன்பு கொண்ட உயிர்களுக்குத் தடையேதும் செய்யாமல் உடனே அவர்களின் உள்ளத்தில் புகுந்து வீற்றிருப்பதையும் தெரிந்து கொண்டேன்.
I also came to know that God, the Mahadeva greatest among all the gods, enters at once and dwells within the hearts of souls who hold pure love toward him, without any hindrance.
- வரி 4Line 4
இவையெல்லாம் படிப்பதின் மூலமாகவோ அல்லது கேட்பதின் மூலமோ கற்றுக்கொள்ள முடியாத பேரறிவு ஞானத்தை இறைவனது அருளால் கற்றுக்கொண்டேன்.
All this, a supreme wisdom that cannot be learned through reading or through hearing, I learned through God's grace.
திருமந்திரம் பாடல் #290





