தொடர்ந்து படிக்கread this section continuously
கற்றறி வாளர் கருதிய காலத்துக்கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டுகற்றறி வாளர் கருதி உரைசெய்யும்கற்றறி காட்டக் கயலுள வாக்குமே.
உரைmeaning
கல்வி அறிவைக் குருவின் மூலம் கற்று அறிந்த உயிர்கள், தாம் கற்றுக்கொண்ட அறிவை ஆராய்ந்து பார்த்தால், தாம் கற்று அறிந்த கல்வியினால் கிடைத்த அறிவுக்குள் ஒரு பேரறிவு ஞானம் இருப்பதைத் தெரிந்து கொள்வார்கள். உயிர்கள் தாம் கற்றுக் கொண்ட உலக கல்விக்குள் உண்மையான அறிவைக் கொடுக்கும் ஞானக் கண்ணை எண்ணித் தியானித்து பேரறிவு ஞானத்தைப் பெறவேண்டும். அப்படிப் பெற்ற பேரறிவு ஞானத்தைக் குருவாக இருந்து தன்னை நாடி வருபவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ப நயன தீட்சை மூலம் காண்பிக்க முடியும்.
நயன தீட்சை என்பது, முட்டை போடும் மீன் வகைகள் முட்டை போட்டதும் தன் முட்டையைப் பார்த்துக்கொண்டே இருக்கும், சிறிது நேரத்தில் அனைத்து முட்டைகளும் குஞ்சு பொறித்துவிடும், இதுபோல் குருவானவர் சீடனைப் பார்த்ததும் பேரறிவு ஞானமடைய வைக்கலாம் என்பதாகும்.
Souls who have learned learning's knowledge through a guru, if they examine the knowledge they have learned, will come to know that within the knowledge gained through their learning lies a supreme wisdom. Souls must meditate, fixing their thought on the eye of wisdom that grants true knowledge within the worldly learning they have gained, and so obtain that supreme wisdom. The supreme wisdom obtained in this way can, being a guru, be shown through nayana diksha, initiation by the eye, to those who come seeking him, according to their fitness.
Nayana diksha is this: just as fish that lay eggs keep gazing upon their eggs, and in a short time all the eggs hatch into young, so too a guru, merely by gazing upon a disciple, can bring him to attain supreme wisdom.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
கல்வி அறிவைக் குருவின் மூலம் கற்று அறிந்த உயிர்கள், தாம் கற்றுக்கொண்ட அறிவை ஆராய்ந்து பார்த்தால்,
Souls who have learned learning's knowledge through a guru, if they examine the knowledge they have learned,
- வரி 2Line 2
தாம் கற்று அறிந்த கல்வியினால் கிடைத்த அறிவுக்குள் ஒரு பேரறிவு ஞானம் இருப்பதைத் தெரிந்து கொள்வார்கள்.
will come to know that within the knowledge gained through their learning lies a supreme wisdom.
- வரி 3Line 3
உயிர்கள் தாம் கற்றுக் கொண்ட உலக கல்விக்குள் உண்மையான அறிவைக் கொடுக்கும் ஞானக் கண்ணை எண்ணித் தியானித்து பேரறிவு ஞானத்தைப் பெறவேண்டும்.
Souls must meditate, fixing their thought on the eye of wisdom that grants true knowledge within the worldly learning they have gained, and so obtain that supreme wisdom.
- வரி 4Line 4
அப்படிப் பெற்ற பேரறிவு ஞானத்தைக் குருவாக இருந்து தன்னை நாடி வருபவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ப நயன தீட்சை மூலம் காண்பிக்க முடியும்.
The supreme wisdom obtained in this way can, being a guru, be shown through nayana diksha, initiation by the eye, to those who come seeking him, according to their fitness.
திருமந்திரம் பாடல் #291





