திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 292

தொடர்ந்து படிக்கread this section continuously

நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல்கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்மற்றொன்று இலாத மணிவிளக் காமே.

உரை

நமது உடலில் உயிர் இருக்கும் காலத்திலேயே என்றும் நிலைத்திருக்கும் இறைவனின் பாதங்களைத் தம் உள்ளத்திற்குள் காணுகின்ற பேரறிவு ஞானத்தைக் கற்றுக்கொள்ளும் வழிகளைத் தேடிக் கற்றுக் கொண்டால், நாம் எப்பிறவியிலும் செய்த பாவங்கள் அனைத்தும் நம்மைவிட்டு விலகி அழிந்து போகும். அத்தகைய பேரறிவு ஞானத்தைக் கற்றுக்கொள்ள, சத்தியம் வாக்கு தவறாமல் இறைவனை மட்டுமே எண்ணிப் போற்றித் தொழுது வாருங்கள். அப்படித் தொழுது வந்தால், இறைவன் மணிவிளக்காக நமது உள்ளத்துக்குள் எழுந்தருளி பேரறிவை தந்தருளுவான்.

வரி வாரியாக

  • வரி 1

    நமது உடலில் உயிர் இருக்கும் காலத்திலேயே என்றும் நிலைத்திருக்கும் இறைவனின் பாதங்களைத் தம் உள்ளத்திற்குள் காணுகின்ற பேரறிவு ஞானத்தைக் கற்றுக்கொள்ளும் வழிகளைத் தேடிக் கற்றுக் கொண்டால்,

  • வரி 2

    நாம் எப்பிறவியிலும் செய்த பாவங்கள் அனைத்தும் நம்மைவிட்டு விலகி அழிந்து போகும்.

  • வரி 3

    அத்தகைய பேரறிவு ஞானத்தைக் கற்றுக்கொள்ள, சத்தியம் வாக்கு தவறாமல் இறைவனை மட்டுமே எண்ணிப் போற்றித் தொழுது வாருங்கள்.

  • வரி 4

    அப்படித் தொழுது வந்தால், இறைவன் மணிவிளக்காக நமது உள்ளத்துக்குள் எழுந்தருளி பேரறிவை தந்தருளுவான்.

திருமந்திரம் பாடல் #292

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout