திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 293

தொடர்ந்து படிக்கread this section continuously

கல்வி யுடையார் கழிந்தோடிப் போகின்றார்பல்லி யுடையார் பாம்பரிந்து உண்கின்றார்எல்லியும் காலையும் ஏத்தும் இறைவனைவல்லியுள் வாதித்தது காயமு மாமே.

உரை

உலக ஞானத்தை மட்டும் அறிந்து கொள்ளும் கல்வியைக் கற்றுக்கொண்ட பலகோடி உயிர்கள் எப்போதும் பிறந்து இறந்து கொண்டுதான் இருக்கின்றனர். எண்ணம் சிதறாத மனமுடையவர்கள் உண்மையான ஞானத்தைச் சிறிது சிறிதாகப் பெற்று, தினமும் காலையும் மாலையும் இறைவனை போற்றி வழிபட்டால், சித்தக் குளிகையால் செம்பு பொன்னாவது போல, இறைவனது அருளால் அழிகின்ற உடல் என்றும் அழியாத காயகல்ப உடலாக மாறிவிடும்.

கருத்து: உண்மையான பேரறிவு ஞானத்தைப் பெறுவதற்கு எதிலும் சிதறாத வலிமையான மனதோடு இறை வழிபாடு தேவை.

வரி வாரியாக

  • வரி 1

    உலக ஞானத்தை மட்டும் அறிந்து கொள்ளும் கல்வியைக் கற்றுக்கொண்ட பலகோடி உயிர்கள் எப்போதும் பிறந்து இறந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

  • வரி 2

    எண்ணம் சிதறாத மனமுடையவர்கள் உண்மையான ஞானத்தைச் சிறிது சிறிதாகப் பெற்று,

  • வரி 3

    தினமும் காலையும் மாலையும் இறைவனை போற்றி வழிபட்டால்,

  • வரி 4

    சித்தக் குளிகையால் செம்பு பொன்னாவது போல, இறைவனது அருளால் அழிகின்ற உடல் என்றும் அழியாத காயகல்ப உடலாக மாறிவிடும்.

திருமந்திரம் பாடல் #293

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout