திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 294

தொடர்ந்து படிக்கread this section continuously

துணையது வாய்வரும் தூயநற் சோதிதுணையது வாய்வரும் தூயநற் சொல்லாம்துணையது வாய்வரும் தூயநற் கந்தம்துணையது வாய்வரும் தூயநற் கல்வியே.

உரை

பாடல் #293 இல் கூறியுள்ளபடி என்றும் அழியாத உடலைப் பெற்ற உயிர்களுக்குத் துணையாகக் கூடவே வருபவை: தூய்மையான பேரொளி ஜோதியாகிய இறைவனும், அந்த உயிர்கள் வேறு உயிர்களுக்குச் சொன்னது அப்படியே உடனே நடக்கும் சத்தியவாக்கும், அவர்கள் செய்த நல்ல கர்மங்களின் நல்ல ஜென்மாந்திர வாசனையும், உண்மையான ஞானமாகிய கல்வியும் ஆகும். இவை அந்த உயிர்களுடன் எப்போதும் துணையாக வருபவை ஆகும்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல்

  • வரி 2

    இரண்டாவது, அந்த உயிர்கள் வேறு உயிர்களுக்குச் சொன்னது அப்படியே உடனே நடக்கும் சத்தியவாக்கு.

  • வரி 3

    மூன்றாவது, அவர்கள் செய்த நல்ல கர்மங்களின் நல்ல ஜென்மாந்திர வாசனை.

  • வரி 4

    நான்காவது, உண்மையான ஞானமாகிய கல்வி; இவை அந்த உயிர்களுடன் எப்போதும் துணையாக வருபவை ஆகும்.

திருமந்திரம் பாடல் #294

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout