திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 295

தொடர்ந்து படிக்கread this section continuously

நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்பாலொன்று பற்றினால் பண்பின் பயன்கெடும்கோலொன்று பற்றினால் கூடா பறவைகள்மாலொன்று பற்றி மயங்குகின் றார்களே.

உரை

அறநூல்கள் கூறிய வழிமுறைகளின்படி நடந்து இறைவனை அடைய முடியாத உயிர்கள், உலக ஆசைகளின்படி வழி நடந்து நல்ல பண்புகளால் கிடைக்கும் பயன்களைக் கெடுத்துக் கொண்டு திரிகின்றார்கள். குச்சி ஒன்றை எடுத்துக் காண்பித்தால் உணவை உண்ண வரும் பறவைகள் விலகி ஓடிவிடுவதுபோல, அறநூல்கள் கூறிய வழிமுறைகளின்படி நடந்தால் உலக ஆசைகளைக் கொடுக்கும் ஐம்புலன்களும் நம்மை விட்டு ஓடிவிடும். இது தெரியாமல், உலக ஆசைகளில் மயங்கிக் கிடந்து வாழ்வை இழக்கின்றனர் உயிர்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    அறநூல்கள் கூறிய வழிமுறைகளின்படி நடந்து இறைவனை அடைய முடியாத உயிர்கள்,

  • வரி 2

    உலக ஆசைகளின்படி வழி நடந்து நல்ல பண்புகளால் கிடைக்கும் பயன்களைக் கெடுத்துக் கொண்டு திரிகின்றார்கள்.

  • வரி 3

    குச்சி ஒன்றை எடுத்துக் காண்பித்தால் உணவை உண்ண வரும் பறவைகள் விலகி ஓடிவிடுவதுபோல,

  • வரி 4

    அறநூல்கள் கூறிய வழிமுறைகளின்படி நடந்தால் உலக ஆசைகளைக் கொடுக்கும் ஐம்புலன்களும் நம்மை விட்டு ஓடிவிடும். இது தெரியாமல், உலக ஆசைகளில் மயங்கிக் கிடந்து வாழ்வை இழக்கின்றனர் உயிர்கள்.

திருமந்திரம் பாடல் #295

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout