தொடர்ந்து படிக்கread this section continuously
ஆய்ந்துகொள் வார்க்கரன் அங்கே வெளிப்படும்தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும்ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்குவாய்ந்தது மனமல்கு நூலேணி யாமே.
உரைmeaning
உண்மை கல்வியான ஞானத்தை ஆராய்ந்து உணர்ந்து கொள்பவர்களின் உள்ளத்துக்குள்ளேயே இறைவன் வெளிப்படுவான். மணிவிளக்கின் உள்ளிருந்து வெளிப்படும் நெருப்பு வெளிச்சத்தைப் போல, தாம் உணர்ந்த கல்வி ஞானத்தின் மூலம் இறைவனை ஜோதியாகத் தமக்குள் தரிசிக்கப் பெற்றவர்களுக்கு, இறைவனை அடைய மனம் தகுதிபெற்று, அந்த மனமே அவர்களை முக்திக்கு ஏற்றிவிடும் ஏணியாகவும் இருக்கும்.
God will reveal himself within the very hearts of those who examine and realise the true learning that is wisdom. Just as light shines forth from within a jewelled lamp, for those who, through the learning-wisdom they have realised, come to behold God as light within themselves, their mind becomes fit to reach God, and that very mind becomes the ladder that lifts them up to liberation.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உண்மை கல்வியான ஞானத்தை ஆராய்ந்து உணர்ந்து கொள்பவர்களின் உள்ளத்துக்குள்ளேயே இறைவன் வெளிப்படுவான்.
God will reveal himself within the very hearts of those who examine and realise the true learning that is wisdom.
- வரி 2Line 2
மணிவிளக்கின் உள்ளிருந்து வெளிப்படும் நெருப்பு வெளிச்சத்தைப் போல,
Just as light shines forth from within a jewelled lamp,
- வரி 3Line 3
தாம் உணர்ந்த கல்வி ஞானத்தின் மூலம் இறைவனை ஜோதியாகத் தமக்குள் தரிசிக்கப் பெற்றவர்களுக்கு,
for those who, through the learning-wisdom they have realised, come to behold God as light within themselves,
- வரி 4Line 4
இறைவனை அடைய மனம் தகுதிபெற்று, அந்த மனமே அவர்களை முக்திக்கு ஏற்றிவிடும் ஏணியாகவும் இருக்கும்.
their mind becomes fit to reach God, and that very mind becomes the ladder that lifts them up to liberation.
திருமந்திரம் பாடல் #296





