திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 297

தொடர்ந்து படிக்கread this section continuously

வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன்கழித்துணை யாங்கற் றிலாதவர் சிந்தைஒழித்துணை யாமும்ப ராமுல கேழும்வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே.

உரை

உண்மை ஞானமாகிய கல்வி கற்றவர்களின் சிந்தனை உயிர்களுக்கெல்லாம் வழித்துணையாகவும் நோய் தீர்க்கும் மருந்தாகவும் இருக்கும். உண்மை ஞானமாகிய கல்வி இல்லாதவர்களின் சிந்தனை இறைவனைப் பற்றிய எண்ணங்களை இல்லாமல் அறியாமையை கொடுக்கும். உண்மை ஞானமாகிய கல்வி கற்றவர்களுக்கு, தேவலோகம் முதலிய ஏழு உலகங்களுக்கும் வழித்துணையாய் இருக்கும் இறைவனே பெருங்கருணையுடன் அருள் புரிவான்.

வரி வாரியாக

  • வரி 1

    உண்மை ஞானமாகிய கல்வி கற்றவர்களின் சிந்தனை உயிர்களுக்கெல்லாம் வழித்துணையாகவும் நோய் தீர்க்கும் மருந்தாகவும் இருக்கும்.

  • வரி 2

    உண்மை ஞானமாகிய கல்வி இல்லாதவர்களின் சிந்தனை இறைவனைப் பற்றிய எண்ணங்களை இல்லாமல் அறியாமையை கொடுக்கும்.

  • வரி 3

    உண்மை ஞானமாகிய கல்வி கற்றவர்களுக்கு, தேவலோகம் முதலிய ஏழு உலகங்களுக்கும் வழித்துணையாய் இருக்கும் இறைவனே

  • வரி 4

    பெருங்கருணையுடன் அருள் புரிவான்.

திருமந்திரம் பாடல் #297

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout