தொடர்ந்து படிக்கread this section continuously
பற்றது பற்றின் பரமனைப் பற்றுமின்முற்றது எல்லா முதல்வன் அருள்பெறில்கிற்ற விரகின் கிளரொளி வானவர்கற்றுஅவர் பேரின்பம் உற்றுநின் றாரே.
உரைmeaning
எதையாவது வேண்டும் என்று எண்ணி அதனை அடைய ஆசைப்பட்டால், இறைவன் வேண்டும் என்று ஆசைப்பட்டு அவனை அடையுங்கள். அனைத்திற்கும் முதல்வனாகிய இறைவனை அடைந்து அவன் அருளைப் பெற்றுவிட்டால், எல்லா ஆசைகளுக்கும் மேலானதை அடைந்திருப்பதை உணரலாம். தவ ஒளியுடன் இருக்கும் தேவர்களை விட, உண்மைக் கல்வி ஞானத்தின் மூலம் இறைவனை உணர்ந்தவர்கள் மிகுந்த பேரின்பம் பெறுகிறார்கள்.
If you set your thought on wanting something and desire to attain it, then desire and attain God instead. If you reach God, who is the first cause of all things, and receive his grace, you will realise that you have attained what stands above every desire. More than even the gods who shine with the light of their own austerities, those who have realised God through true wisdom as learning receive far greater supreme bliss.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
எதையாவது வேண்டும் என்று எண்ணி அதனை அடைய ஆசைப்பட்டால், இறைவன் வேண்டும் என்று ஆசைப்பட்டு அவனை அடையுங்கள்.
If you set your thought on wanting something and desire to attain it, then desire and attain God instead.
- வரி 2Line 2
அனைத்திற்கும் முதல்வனாகிய இறைவனை அடைந்து அவன் அருளைப் பெற்றுவிட்டால், எல்லா ஆசைகளுக்கும் மேலானதை அடைந்திருப்பதை உணரலாம்.
If you reach God, who is the first cause of all things, and receive his grace, you will realise that you have attained what stands above every desire.
- வரி 3Line 3
தவ ஒளியுடன் இருக்கும் தேவர்களை விட,
More than even the gods who shine with the light of their own austerities,
- வரி 4Line 4
உண்மைக் கல்வி ஞானத்தின் மூலம் இறைவனை உணர்ந்தவர்கள் மிகுந்த பேரின்பம் பெறுகிறார்கள்.
those who have realised God through true wisdom as learning receive far greater supreme bliss.
திருமந்திரம் பாடல் #298





