அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார்அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்அன்பே சிவமாய் அமர்ந்துஇருந் தாரே.
பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன்மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறைதுன்னிக் கிடந்த சுடுபொடு யாடிக்குப்பின்னிக் கிடந்ததுஎன் பேரன்பு தானே.
என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்பொன்போற் கனலில் பொரிய வறுப்பினும்அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றிஎன்பொலா மணியினை எய்தவொண் ணாதே.
ஆர்வம் உடையவர் காண்பர் அரன்றன்னைஈரம் உடையவர் காண்பர் இணையடிபாரம் உடையவர் காண்பர் பவந்தன்னைக்கோர நெருக்குகொடு கொங்குபுக் காரே.
என்னன் புருக்கி இறைவனை ஏத்துமின்முன்னன் புருக்கி முதல்வனை நாடுமின்பின்னன் புருக்கிப் பெருந்தகை நந்தியும்தன்னன் புஎனக்கே தலைநின்ற வாறே.
தானொரு காலம் சயம்புவென் றேத்தினும்வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும்தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன்தானொரு வண்ணமாயென் அன்பில்நின் றானே.
முன்படைத் தின்பம் படைத்த முதலிடைஅன்படைத் தெம்பெரு மானை அறிகிலார்வன்படைத் திந்த அகலிடம் வாழ்வினில்அன்படைத் தான்றனர் அகலிடந் தானே.
கருத்துறு செம்பொன்செய் காய்கதிர்ச் சோதிஇருத்தியும் வைத்தும் இறைவென் றேத்தியும்அருத்தியுள் ஈசனை யாரருள் வேண்டில்விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே.
நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன்வைத்த பரிசறிந் தேயு மனிதர்கள்இச்சையு ளேவைப்பர் எந்தை பிரானென்றுநச்சியே அண்ணலை நாடுகின்றி லாரே.
அன்பினுள் ளான்புறத் தானுட லாயுளான்முன்பினுள் ளான்முனி வர்க்கும் பிரானவன்அன்பினுள் ளாகி அமரும் அரும்பொருள்அன்பினுள் ளாருக்கே அணைதுணை யாமே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #270
1 / 10




