தொடர்ந்து படிக்கread this section continuously
தானொரு காலம் சயம்புவென் றேத்தினும்வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும்தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன்தானொரு வண்ணமாயென் அன்பில்நின் றானே.
உரைmeaning
காலங்கள் தோன்றுவதற்கும் முன்பே தானாகவே தோன்றியவனும், தன்னை அன்போடு போற்றி வணங்கி வாழ்ந்த உயிர்கள் இறந்து விண்ணுலகம் செல்லும்போது அவர்களுக்கு வழித்துணையாக வருபவனும், தேன் நிறைந்து ஊறும் கொன்றை மலர்களைத் தன் இடப் பாகத்தில் மாலையாக அணிந்திருப்பவனுமான சிவபெருமான், யான் அவன் மேல் கொண்டுள்ள பேரன்பின் உருவமாகவே என்னுடன் கலந்து நின்றிருக்கின்றான்.
Sivaperuman, who came into being of his own accord even before time itself began, who becomes the companion on the way for souls who lived praising and worshipping him with love, when they die and journey to the heavens, and who wears on his left side a garland of konrai flowers dripping with honey, stands merged with me in the very form of the boundless love I bear toward him.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
காலங்கள் தோன்றுவதற்கும் முன்பே தானாகவே தோன்றியவனும்,
Sivaperuman, who came into being of his own accord even before time itself began,
- வரி 2Line 2
தன்னை அன்போடு போற்றி வணங்கி வாழ்ந்த உயிர்கள் இறந்து விண்ணுலகம் செல்லும்போது அவர்களுக்கு வழித்துணையாக வருபவனும்,
who becomes the companion on the way for souls who lived praising and worshipping him with love, when they die and journey to the heavens,
- வரி 3Line 3
தேன் நிறைந்து ஊறும் கொன்றை மலர்களைத் தன் இடப் பாகத்தில் மாலையாக அணிந்திருப்பவனுமான சிவபெருமான்,
and who wears on his left side a garland of konrai flowers dripping with honey, that Sivaperuman,
- வரி 4Line 4
யான் அவன் மேல் கொண்டுள்ள பேரன்பின் உருவமாகவே என்னுடன் கலந்து நின்றிருக்கின்றான்.
stands merged with me in the very form of the boundless love I bear toward him.
திருமந்திரம் பாடல் #275





