தொடர்ந்து படிக்கread this section continuously
என்னன் புருக்கி இறைவனை ஏத்துமின்முன்னன் புருக்கி முதல்வனை நாடுமின்பின்னன் புருக்கிப் பெருந்தகை நந்தியும்தன்னன் புஎனக்கே தலைநின்ற வாறே.
உரைmeaning
ஏதேனும் ஒரு வகையில் மனம் உருகும்படியான அன்புடன் இறைவனைப் போற்றி வழிபடுங்கள். உயிர் உடலைவிட்டுப் பிரியும் முன்பே, உருக்கமான அன்பை எல்லா உயிர்களிடத்திலும் காட்டுவதன் மூலம் இறைவனைத் தேடுங்கள். இப்படிச் செய்துவந்தால், அடியேன் மீது கொண்ட அளவற்ற பெருங்கருணையால் குருவாக நின்று தனது அன்பை எனக்கெனவே தந்து என்னோடு எப்போதும் கலந்திருந்ததுபோலவே, உங்கள் உயிர் உடலைவிட்டுப் பிரிந்த பின்னும் உங்களுக்கும் தனது அளவற்ற பெருங்கருணையை வழங்கி, உங்களோடும் இறைவன் எப்போதும் கலந்து நிற்பான்.
Praise and worship God with love that melts your heart in whatever way you can. Before your soul departs from your body, seek God by showing that melting love to all living beings. If you do this, then just as, out of the boundless great compassion he bore for this servant of his, God stood as guru and gave me his own love, and remained forever merged with me, so too, even after your soul departs the body, will he grant you that same boundless great compassion, and remain forever merged with you as well.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஏதேனும் ஒரு வகையில் மனம் உருகும்படியான அன்புடன் இறைவனைப் போற்றி வழிபடுங்கள்.
Praise and worship God with love that melts your heart in whatever way you can.
- வரி 2Line 2
உயிர் உடலைவிட்டுப் பிரியும் முன்பே, உருக்கமான அன்பை எல்லா உயிர்களிடத்திலும் காட்டுவதன் மூலம் இறைவனைத் தேடுங்கள்.
Before your soul departs from your body, seek God by showing that melting love to all living beings.
- வரி 3Line 3
இப்படிச் செய்துவந்தால், அடியேன் மீது கொண்ட அளவற்ற பெருங்கருணையால் குருவாக நின்று தனது அன்பை எனக்கெனவே தந்து என்னோடு எப்போதும் கலந்திருந்ததுபோலவே,
If you do this, then just as, out of the boundless great compassion he bore for this servant of his, God stood as guru and gave me his own love, and remained forever merged with me,
- வரி 4Line 4
உங்கள் உயிர் உடலைவிட்டுப் பிரிந்த பின்னும் உங்களுக்கும் தனது அளவற்ற பெருங்கருணையை வழங்கி, உங்களோடும் இறைவன் எப்போதும் கலந்து நிற்பான்.
so too, even after your soul departs the body, will he grant you that same boundless great compassion, and remain forever merged with you as well.
திருமந்திரம் பாடல் #274





