தொடர்ந்து படிக்கread this section continuously
ஆர்வம் உடையவர் காண்பர் அரன்றன்னைஈரம் உடையவர் காண்பர் இணையடிபாரம் உடையவர் காண்பர் பவந்தன்னைக்கோர நெருக்குகொடு கொங்குபுக் காரே.
உரைmeaning
இறைவனைக் காண வேண்டுமென்ற அன்பினால் தீராத ஆசை கொண்டவர்கள், அனைத்தையும் காத்து நிற்கும் இறைவனது திருவுருவத்தைக் கண்டு பயன்பெறுவார்கள். பிற உயிர்களிடத்தும் இறைவனைக் கண்டு தூய அன்புடன் உள்ளம் கசிந்திருப்பவர்கள், இறைவனது ஈடுஇணையில்லாத திருவடிகளைக் கண்டு பயன்பெறுவார்கள். இப்படியில்லாமல் பிறவிக்குக் காரணமான கர்மவினைகளை அதிகமாக வைத்திருப்பவர்கள் இறைவனைக் காணாமல் உலகப் பற்றுகளிலேயே இருப்பார்கள். வினையின் பயனால் எத்தனை பிறவி எடுத்தாலும் அன்பில்லாத உள்ளம் கொண்டவர்கள், கொடுமையான துன்பம் நிறைந்த இடத்திலேயே மீண்டும் மீண்டும் பிறப்பார்கள்.
Those who hold an unquenchable longing born of love to behold God will benefit from beholding the sacred form of God, who watches over and protects everything. Those whose hearts melt with pure love, seeing God in other living beings, will benefit from beholding God's peerless holy feet. Without this, those who carry a heavy weight of the karma that causes rebirth will remain caught in worldly attachments without ever beholding God. However many births they take as the fruit of their karma, those who carry a loveless heart will be born again and again only in places filled with cruel suffering.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவனைக் காண வேண்டுமென்ற அன்பினால் தீராத ஆசை கொண்டவர்கள், அனைத்தையும் காத்து நிற்கும் இறைவனது திருவுருவத்தைக் கண்டு பயன்பெறுவார்கள்.
Those who hold an unquenchable longing born of love to behold God will benefit from beholding the sacred form of God, who watches over and protects everything.
- வரி 2Line 2
பிற உயிர்களிடத்தும் இறைவனைக் கண்டு தூய அன்புடன் உள்ளம் கசிந்திருப்பவர்கள், இறைவனது ஈடுஇணையில்லாத திருவடிகளைக் கண்டு பயன்பெறுவார்கள்.
Those whose hearts melt with pure love, seeing God in other living beings, will benefit from beholding God's peerless holy feet.
- வரி 3Line 3
இப்படியில்லாமல் பிறவிக்குக் காரணமான கர்மவினைகளை அதிகமாக வைத்திருப்பவர்கள் இறைவனைக் காணாமல் உலகப் பற்றுகளிலேயே இருப்பார்கள்.
Without this, those who carry a heavy weight of the karma that causes rebirth will remain caught in worldly attachments without ever beholding God.
- வரி 4Line 4
வினையின் பயனால் எத்தனை பிறவி எடுத்தாலும் அன்பில்லாத உள்ளம் கொண்டவர்கள், கொடுமையான துன்பம் நிறைந்த இடத்திலேயே மீண்டும் மீண்டும் பிறப்பார்கள்.
However many births they take as the fruit of their karma, those who carry a loveless heart will be born again and again only in places filled with cruel suffering.
திருமந்திரம் பாடல் #273





