தொடர்ந்து படிக்கread this section continuously
என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்பொன்போற் கனலில் பொரிய வறுப்பினும்அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றிஎன்பொலா மணியினை எய்தவொண் ணாதே.
உரைmeaning
உடலின் எலும்புகளை விறகுகளாக்கி, பொன்னிறத்தில் தகதகவென எரியும் தீயில் உடலின் தசைகளை அறுத்துப் பொரிய வறுத்தாலும், அன்போடு மனம் உருகி உள்ளம் குழைந்தவர்களைத் தவிர வேறு யாராலும் செதுக்க முடியாத, தூய மாணிக்கம் போன்ற இறைவனை அடைய முடியாது.
உயிர்கள் தமது உடலைக் கொடூரமாக வருத்தி தவம் புரிந்தாலும், தமது உடலையே தீயிலிட்டு யாகம் புரிந்தாலும், அவர்களது உள்ளத்தில் உண்மையான அன்பு இல்லையானால் அவர்கள் என்ன செய்தாலும் இறைவனை அடைய முடியாது. தூய அன்பே இறைவனை அடைவதற்கான மிகச்சிறந்த வழி.
Even if one made firewood of one's own bones, and cut the body's flesh and roasted it crackling in a blaze that burns golden, one still could not reach God, who is like a pure gem that can be shaped by no one except those whose hearts have melted and whose minds have softened with love.
Even if souls torment their bodies cruelly performing austerities, or offer their very bodies into fire as a yagna, if there is no true love in their heart, whatever they do, they cannot reach God. Pure love alone is the finest way of reaching him.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உடலின் எலும்புகளை விறகுகளாக்கி, தசைகளை அறுத்து,
Making firewood of the body's bones, and cutting its flesh,
- வரி 2Line 2
பொன்னிறத்தில் தகதகவென எரியும் தீயில் பொரிய வறுத்தாலும்,
and roasting it crackling in a blaze that burns golden,
- வரி 3Line 3
அன்போடு மனம் உருகி உள்ளம் குழைந்தவர்களைத் தவிர வேறு யாராலும்,
still, except for those whose hearts have melted and whose minds have softened with love, by no one else
- வரி 4Line 4
செதுக்க முடியாத, தூய மாணிக்கம் போன்ற இறைவனை அடைய முடியாது.
can the pure, unhewn ruby-like God be reached or shaped.
திருமந்திரம் பாடல் #272





