தொடர்ந்து படிக்கread this section continuously
பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன்மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறைதுன்னிக் கிடந்த சுடுபொடு யாடிக்குப்பின்னிக் கிடந்ததுஎன் பேரன்பு தானே.
உரைmeaning
தூய தங்கத்தை விடவும் அதிகமாக ஒளிரும் புலித்தோலை உடையாக அணிந்தவனும், மின்னி ஜொலிக்கும், பால் போன்ற வெண்மையில் திகழும் இளம் பிறைச் சந்திரனைத் தன் சடைமுடியில் அணிந்தவனும், சுடுகாட்டில் எரிந்து மிஞ்சும் சூடான சாம்பலைப் பொடியாகத் தன் திருமேனி முழுவதும் பூசிக்கொண்டு, அந்தப் பொடியின் மேலேயே திருநடனம் ஆடுகின்ற கூத்தனாகிய இறைவனின் மேல் யாம் செலுத்திய அன்பும், அவன் எம்மேல் கொண்ட அன்பும், இரண்டறப் பின்னிக் கலந்திருக்கின்றன.
உண்மையான, எதிர்பார்ப்பில்லாத பேரன்பை எதன் மீது செலுத்தினாலும் அதுவே சிவமாக இருக்கிறது என்பதை உணர்ந்தவரோடு, சிவனும் அந்தப் பேரன்பாகவே இரண்டறக் கலந்திருப்பான்.
He who wears as his garment the tiger-skin that shines brighter than pure gold, he who wears in his matted locks the young crescent moon that gleams and glistens in a milk-white radiance, he who smears the hot ash left over from the cremation ground all over his sacred body as powder, and dances his sacred dance upon that very powder, the dancer who is God, the love I have poured upon him and the love he has borne toward me have twined together inseparably, as one.
Whoever has realized that true, expectation-free, boundless love, poured out upon anything at all, is itself Sivam, with that person Sivan too remains twined together inseparably as that very boundless love.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
தூய தங்கத்தை விடவும் அதிகமாக ஒளிரும் புலித்தோலை உடையாக அணிந்தவனும்,
He who wears as his garment the tiger-skin that shines brighter than pure gold,
- வரி 2Line 2
மின்னி ஜொலிக்கும், பால் போன்ற வெண்மையில் திகழும் இளம் பிறைச் சந்திரனைத் தன் சடைமுடியில் அணிந்தவனும்,
he who wears in his matted locks the young crescent moon that gleams and glistens in a milk-white radiance,
- வரி 3Line 3
சுடுகாட்டில் எரிந்து மிஞ்சும் சூடான சாம்பலைப் பொடியாகத் தன் திருமேனி முழுவதும் பூசிக்கொண்டு, அந்தப் பொடியின் மேலேயே திருநடனம் ஆடுகின்ற கூத்தனாகிய இறைவன்,
he who smears the hot ash left over from the cremation ground all over his sacred body as powder, and dances his sacred dance upon that very powder, the dancer who is God,
- வரி 4Line 4
அவன் மேல் யாம் செலுத்திய அன்பும், அவன் எம்மேல் கொண்ட அன்பும், இரண்டறப் பின்னிக் கலந்திருக்கின்றன.
the love I have poured upon him and the love he has borne toward me have twined together inseparably, as one.
திருமந்திரம் பாடல் #271





