திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 270

முதல் தந்திரம்18. அன்புடைமை

தொடர்ந்து படிக்கread this section continuously

அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார்அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்அன்பே சிவமாய் அமர்ந்துஇருந் தாரே.

உரை

அன்பு என அழைக்கப்படும் உணர்வும், சிவம் என அழைக்கப்படும் இறைவனும் இரண்டு வெவ்வேறானவை என்று கூறுகின்றவர்கள் உண்மை ஞானமில்லாத அறிவிலிகள். அசையும் பொருள் அசையா பொருள் என அனைத்திலும், ஓர் அறிவு முதல் ஆறு அறிவு வரை உள்ள எல்லா உயிர்கள் மீதும் செலுத்தப்படும் எதிர்பார்ப்பில்லாத தூய அன்பே சிவம் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. இறைவனின் திருவருளால் தமக்குள்ளும் பிறருக்குள்ளும் இருந்து வெளிப்படும் தூய அன்பே சிவம் என்பதை அறிந்து உணர்ந்தபின், அந்த ஞானமே தூய அன்பாக, சிவமாக, அவரது உள்ளத்தில் அமர்ந்து இருக்கும்.

வரி வாரியாக

  • வரி 1

    அன்பு என அழைக்கப்படும் உணர்வும், சிவம் என அழைக்கப்படும் இறைவனும் இரண்டு வெவ்வேறானவை என்று கூறுகின்றவர்கள் உண்மை ஞானமில்லாத அறிவிலிகள்.

  • வரி 2

    அசையும் பொருள் அசையா பொருள் என அனைத்திலும், ஓர் அறிவு முதல் ஆறு அறிவு வரை உள்ள எல்லா உயிர்கள் மீதும் செலுத்தப்படும் எதிர்பார்ப்பில்லாத தூய அன்பே சிவம் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை.

  • வரி 3

    இறைவனின் திருவருளால் தமக்குள்ளும் பிறருக்குள்ளும் இருந்து வெளிப்படும் தூய அன்பே சிவம் என்பதை அறிந்து உணர்ந்தபின்,

  • வரி 4

    அந்த ஞானமே தூய அன்பாக, சிவமாக, அவரது உள்ளத்தில் அமர்ந்து இருக்கும்.

திருமந்திரம் பாடல் #270

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout