திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 269

முதல் தந்திரம்17. அறஞ்செய்யான் திறம்

தொடர்ந்து படிக்கread this section continuously

செல்வங் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும்புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல்இல்லங் கருதி இறைவனை ஏத்துமின்வில்லி இலக்குஎய்த விற்குறி யாமே.

உரை

பணக்காரர் என்று சிலரும் ஏழைகள் என்று பலரும் வாழும் இவ்வுலகில், பணம் பெறுவதற்காக செல்வந்தர்களைப் பேரறிவு உடையவர் என்று போற்றிப் புகழாமல், முக்தி அளிக்கக்கூடிய இறைவனையே போற்றி வழிபடுங்கள். இது, வேடன் தனக்கு வேண்டியதைக் குறிபார்த்து அம்பு எய்து குறிதவறாமல் அடிப்பதைப் போன்றது.

வில்லிலிருந்து குறிபார்த்து அம்பு விட்டு வேண்டியதைப் பெறுவது போல, உயிருக்கு உண்மையில் தேவையானது எது என்று குறிபார்த்து, அதைத் தரக்கூடியவரைப் போற்றி வழிபட்டு வாழவேண்டும்.

வரி வாரியாக

  • வரி 1

    பணக்காரர் என்று சிலரும் ஏழைகள் என்று பலரும் வாழும் இவ்வுலகில்,

  • வரி 2

    பணம் பெறுவதற்காக செல்வந்தர்களைப் பேரறிவு உடையவர் என்று போற்றிப் புகழாமல்,

  • வரி 3

    முக்தி அளிக்கக்கூடிய இறைவனையே போற்றி வழிபடுங்கள்.

  • வரி 4

    இது, வேடன் தனக்கு வேண்டியதைக் குறிபார்த்து அம்பு எய்து குறிதவறாமல் அடிப்பதைப் போன்றது.

திருமந்திரம் பாடல் #269

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout