எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தனஒட்டிய நல்லறம் செய்யா தவர்செல்வம்வட்டிகொண் டீட்டியே மண்ணின் முகந்திடும்பட்டிப் பதகர் பயனுமறி யாரே.
ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயிக்கழிந்தன கற்பனை நாளும் குறுகிப்பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கைஅழிந்தன கண்டும் அறம்அறி யாரே.
அறம்அறி யார்அண்ணல் பாதம் நினையும்திறம்அறி யார்சிவ லோக நகர்க்குப்புறம்அறி யார்பலர் பொய்மொழி கேட்டுமறம்அறி வார்பகை மன்னிநின் றாரே.
இருமலுஞ் சோகையும் ஈளையும் வெப்புந்தருமஞ்செய் யாதவர் தம்பால தாகும்உருமிடி நாகம் உரோணி கழலைதருமஞ்செய் வார்பக்கல் தாழகி லாவே.
பரவப் படுவார் பரமனை ஏத்தார்இரவலர்க் கீதலை யாயினும் ஈயார்கரகத்தால் நீரட்டிக் காவை வளர்க்கார்நரகத்தில் நிற்றிரோ நன்னெஞ்சி னீரே.
வழிநடப் பாரின்றி வானோர் உலகம்கழிநடப் பார்நடந் தார்கரும் பாரும்மழிநடக் கும்வினை மாசற வோட்டிஒழிநடப் பார்வினை ஓங்கிநின் றாரே.
கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர்துணிந்தவர் ஈசன் துறக்கம தாள்வர்மலிந்தவர் மாளுந் துணையுமொன் றின்றிமெலிந்த சினத்தினுள் வீழ்ந்தொழிந் தாரே.
இன்பம் இடரென் றிரண்டுற வைத்ததுமுன்பவர் செய்கையி னாலே முடிந்ததுஇன்ப மதுகண்டும் ஈகிலாப் பேதைகள்அன்பிலார் சிந்தையில் அறம்அறி யாரே.
கெடுவதும் ஆவதும் கேடில் புகழோன்நடுவல்ல செய்தின்பம் நாடவும் ஒட்டான்இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம்படுவது செய்யிற் பசுவது வாமே.
செல்வங் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும்புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல்இல்லங் கருதி இறைவனை ஏத்துமின்வில்லி இலக்குஎய்த விற்குறி யாமே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #260
1 / 10




