திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 264

முதல் தந்திரம்17. அறஞ்செய்யான் திறம்

தொடர்ந்து படிக்கread this section continuously

பரவப் படுவார் பரமனை ஏத்தார்இரவலர்க் கீதலை யாயினும் ஈயார்கரகத்தால் நீரட்டிக் காவை வளர்க்கார்நரகத்தில் நிற்றிரோ நன்னெஞ்சி னீரே.

உரை

எல்லா உயிர்களும் வணங்கித் தொழும் பரம்பொருளான இறைவனை வணங்காதவர்கள், தர்மம் கேட்டு வருபவர்களுக்குத் தம்மிடம் மீதமிருப்பதிலிருந்து ஈயின் தலையளவு கூடத் தர்மம் கொடாதவர்கள், செடிகளுக்குச் சிறிதளவு நீர் ஊற்றி வளர்க்காதவர்கள், இப்படிப்பட்டவர்கள் தம்மையே நல்லவர் என்று எண்ணிக்கொண்டு வாழ்கிறார்கள். இவர்கள் இறந்தபின் நரகத்தில்தான் போய் நிற்பார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    எல்லா உயிர்களும் வணங்கித் தொழும் பரம்பொருளான இறைவனை வணங்காதவர்கள்,

  • வரி 2

    தர்மம் கேட்டு வருபவர்களுக்குத் தம்மிடம் மீதமிருப்பதிலிருந்து ஈயின் தலையளவு கூடத் தர்மம் கொடாதவர்கள்,

  • வரி 3

    செடிகளுக்குச் சிறிதளவு நீர் ஊற்றி வளர்க்காதவர்கள், இப்படிப்பட்டவர்கள் தம்மையே நல்லவர் என்று எண்ணிக்கொண்டு வாழ்கிறார்கள்.

  • வரி 4

    இவர்கள் இறந்தபின் நரகத்தில்தான் போய் நிற்பார்கள்.

திருமந்திரம் பாடல் #264

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout