தொடர்ந்து படிக்கread this section continuously
வழிநடப் பாரின்றி வானோர் உலகம்கழிநடப் பார்நடந் தார்கரும் பாரும்மழிநடக் கும்வினை மாசற வோட்டிஒழிநடப் பார்வினை ஓங்கிநின் றாரே.
உரைmeaning
தர்ம வழியில் நடப்பவர் மட்டுமே விண்ணுலகத்திற்குச் செல்ல முடியும்; வேறு யாரும் செல்ல முடியாது. தருமவழியில் இல்லாமல் ஆசைவழியிலேயே நடப்பவர்கள் இருள் சூழ்ந்த உலகமான நரகத்திற்குத்தான் செல்ல முடியும். ஆசையின் வழியில் இழுத்துச் செல்லும் வினைகளையும் மும்மலங்களையும் இறைவனின் திருவருளால் நீக்கிக்கொண்டு, தாம் கொண்ட தர்மநெறியில் நடப்பவர்கள், தாம் பிறந்த இப்பிறவிக்கும் இனிப் பிறக்கப்போகும் பல பிறவிகளுக்கும் நல்வினைகளை மேலும் மேலும் சேர்த்துக்கொள்பவர்கள் ஆவார்கள்.
Only those who walk the path of dharma can reach the world of the celestials; no one else can reach it. Those who do not walk the path of dharma but walk instead the path of desire can only reach hell, the world wrapped in darkness. Those who, through God's own grace, cast off the karmas and the three malams that drag them along the path of desire, and who walk the path of dharma they have taken up, are the ones who go on gathering more and more good karma, for this birth they were born into and for the many births yet to come.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
தர்ம வழியில் நடப்பவர் மட்டுமே விண்ணுலகத்திற்குச் செல்ல முடியும்; வேறு யாரும் செல்ல முடியாது.
Only those who walk the path of dharma can reach the world of the celestials; no one else can reach it.
- வரி 2Line 2
தருமவழியில் இல்லாமல் ஆசைவழியிலேயே நடப்பவர்கள் இருள் சூழ்ந்த உலகமான நரகத்திற்குத்தான் செல்ல முடியும்.
Those who do not walk the path of dharma but walk instead the path of desire can only reach hell, the world wrapped in darkness.
- வரி 3Line 3
ஆசையின் வழியில் இழுத்துச் செல்லும் வினைகளையும் மும்மலங்களையும் இறைவனின் திருவருளால் நீக்கிக்கொண்டு,
Those who, through God's own grace, cast off the karmas and the three malams that drag them along the path of desire,
- வரி 4Line 4
தாம் கொண்ட தர்மநெறியில் நடப்பவர்கள், தாம் பிறந்த இப்பிறவிக்கும் இனிப் பிறக்கப்போகும் பல பிறவிகளுக்கும் நல்வினைகளை மேலும் மேலும் சேர்த்துக்கொள்பவர்கள் ஆவார்கள்.
and who walk the path of dharma they have taken up, are the ones who go on gathering more and more good karma, for this birth they were born into and for the many births yet to come.
திருமந்திரம் பாடல் #265





