தொடர்ந்து படிக்கread this section continuously
இருமலுஞ் சோகையும் ஈளையும் வெப்புந்தருமஞ்செய் யாதவர் தம்பால தாகும்உருமிடி நாகம் உரோணி கழலைதருமஞ்செய் வார்பக்கல் தாழகி லாவே.
உரைmeaning
இப்பாடல், அறவழியில் வாழாதவரை நோயும் துன்பமும் தேடி வருகின்றன என்றும், அறத்தை மேற்கொண்டு வாழ்பவரிடமிருந்து அத்தகைய துன்பங்கள் விலகி நிற்கின்றன என்றும் கூறுகிறது.
அறம் என்பது வெறும் சடங்கு அன்று; வாழ்க்கையை நடத்தும் நெறி. அந்நெறியில் நிற்பவருக்குக் காவலாக அறமே நிற்கும் என்பதே இப்பாடலின் கருத்து.
This verse says that sickness and suffering seek out those who live without dharma, and that such afflictions keep their distance from those who live by it.
Dharma here is not ritual but the way a life is conducted, and the verse's point is that for one who stands in that way, dharma itself stands as protection.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
மார்புச் சளியால் வரும் இருமலும், இரத்தக் குறைவால் வரும் இரத்தசோகையும்,
Cough that comes from a chest cold, anemia that comes from a deficiency of blood,
- வரி 2Line 2
சளியால் வரும் காசநோயும், அதிக வெப்பத்தால் வரும் சுரம் போன்ற பிணிகளும் ஆகிய எல்லாவகை நோய்களும் தருமம் செய்யாமல் வாழும் உயிர்களைத் தேடிச் செல்லும்.
consumption that comes from phlegm, and fevers that come from excessive heat, all such illnesses seek out and come to souls who live without doing dharma.
- வரி 3Line 3
ஆனால் உயிருக்கு அச்சம் தரும் இடிமுழக்கமும், நாகப் பாம்பும்,
But thunder-clap and the cobra, which strike fear into life,
- வரி 4Line 4
வாதத்தால் வரும் தொண்டை வீக்கமும், வயிற்றுக் கட்டியால் வரும் கழலைநோயும், இன்னும் இத்தகைய பல இன்னல்தரும் பிணிகளும் தருமம் செய்து வாழ்பவர்களை நெருங்காமல் ஒதுங்கிச் செல்லும்.
the swelling of the throat that comes from rheumatism, and the tumor of the abdomen, and many more such distressing ailments, all stay away and keep their distance from those who live doing dharma.
திருமந்திரம் பாடல் #263





