திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 268

முதல் தந்திரம்17. அறஞ்செய்யான் திறம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கெடுவதும் ஆவதும் கேடில் புகழோன்நடுவல்ல செய்தின்பம் நாடவும் ஒட்டான்இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம்படுவது செய்யிற் பசுவது வாமே.

உரை

உலகில் உள்ள அனைத்தும் தோன்றுவதற்கும் அழிவதற்கும் காரணமான, குற்றமற்ற புகழுடைய இறைவன், நீதிநெறி தவறி அறம் கடைபிடிக்காமல் வாழும் உயிர்களுக்கு இன்பத்தை நினைத்துப்பார்க்கக் கூட விடமாட்டான். பசியோடு வருபவர்களுக்கு உணவு அளித்தும், இல்லாமை கூறி வருபவர்களுக்குத் தம்மால் இயன்றதைக் கொடுத்து உதவியும் வாழ்வதே இன்பம் தருவது என்பதை உணர்ந்து அப்படியே வாழுங்கள். இதற்கு மாறாகப் பிற உயிர்களுக்குத் துன்பம் தரும் செயல்களைச் செய்து வாழ்வது, விலங்கின் வாழ்க்கையைப் போன்றதே ஆகும்.

வரி வாரியாக

  • வரி 1

    உலகில் உள்ள அனைத்தும் தோன்றுவதற்கும் அழிவதற்கும் காரணமான, குற்றமற்ற புகழுடைய இறைவன்,

  • வரி 2

    நீதிநெறி தவறி அறம் கடைபிடிக்காமல் வாழும் உயிர்களுக்கு இன்பத்தை நினைத்துப்பார்க்கக் கூட விடமாட்டான்.

  • வரி 3

    பசியோடு வருபவர்களுக்கு உணவு அளித்தும், இல்லாமை கூறி வருபவர்களுக்குத் தம்மால் இயன்றதைக் கொடுத்து உதவியும் வாழ்வதே இன்பம் தருவது என்பதை உணர்ந்து அப்படியே வாழுங்கள்.

  • வரி 4

    இதற்கு மாறாகப் பிற உயிர்களுக்குத் துன்பம் தரும் செயல்களைச் செய்து வாழ்வது, விலங்கின் வாழ்க்கையைப் போன்றதே ஆகும்.

திருமந்திரம் பாடல் #268

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout