தொடர்ந்து படிக்கread this section continuously
இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்குமகிழ்ந்தன்பு செய்யு மருளது வாமே.
உரைmeaning
தம்மை இகழ்ந்து பேசும் உயிர்களையும், தம்மைப் போற்றி வணங்கும் உயிர்களையும் சிவபெருமான் அறிவான். தம்மை இகழ்ந்து பேசிய உயிர்களுக்குக்கூட மனமுவந்து அவரவர் மனதிற்கேற்ப அருள் வழங்கும் உத்தம நாதனே இறைவன். அப்படிப்பட்ட இறைவனை உயிர்கள் தம் உள்ளத்திலிருந்து வெளிவரும் தூய அன்போடு அழைத்து அருள் வேண்டி நின்றால், அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் வேண்டியதை உடனடியாகத் தந்துவிடுவதே அந்த இறைவனின் பேரருள்.
Sivaperuman knows both the living beings who speak of him with scorn and those who praise and worship him. God is the perfect Lord who, even to those living beings who spoke of him with scorn, willingly grants grace suited to each one's own mind. If living beings call upon such a God with the pure love that arises from within their own heart and stand asking for his grace, then his granting them at once, with great joy, whatever they ask for, is itself that God's great grace.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
தம்மை இகழ்ந்து பேசும் உயிர்களையும், தம்மைப் போற்றி வணங்கும் உயிர்களையும் சிவபெருமான் அறிவான்.
Sivaperuman knows both the living beings who speak of him with scorn and those who praise and worship him.
- வரி 2Line 2
தம்மை இகழ்ந்து பேசிய உயிர்களுக்குக்கூட மனமுவந்து அவரவர் மனதிற்கேற்ப அருள் வழங்கும் உத்தம நாதனே இறைவன்.
God is the perfect Lord who, even to those living beings who spoke of him with scorn, willingly grants grace suited to each one's own mind.
- வரி 3Line 3
அப்படிப்பட்ட இறைவனை உயிர்கள் தம் உள்ளத்திலிருந்து வெளிவரும் தூய அன்போடு அழைத்து அருள் வேண்டி நின்றால்,
If living beings call upon such a God with the pure love that arises from within their own heart and stand asking for his grace,
- வரி 4Line 4
அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் வேண்டியதை உடனடியாகத் தந்துவிடுவதே அந்த இறைவனின் பேரருள்.
then his granting them at once, with great joy, whatever they ask for, is itself that God's great grace.
திருமந்திரம் பாடல் #280





